Showing 3500 results

Archival description
சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம் 
அச்சு முன்காட்சி View:

சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம் 

  • UTSC 014
  • Fonds
  • n.d., 1921, 1929-1930, 1933-1937, 1939-1940, 1944-1988

விளங்கியமையையும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாளாந்த நடவடிக்கைகளையும் இச்சேகரம் பிரதிபலிக்கிறது.

இச்சேகரம் இலங்கையில் 1950 இலிருந்து 1970 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற முக்கியமான அரசியல் நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதோடு இலங்கைத் தமிழர்கள் எதிர்கொண்ட போராட்டங்களுக்கு சாட்சியமாகவும் விளங்குகிறது.

இச்சேகரம் செல்வநாயகம் அவர்களின் குடும்பம், பின்புலம் தொடர்பான ஆவணங்களையும் அவரது துணைவியார் எமிலி கிரேஸ் செல்வநாயகம் சேகரித்த நினைவஞ்சலி ஆவணங்களையும் கொண்டுள்ளது. மூன்று பிரதான வரிசைகளாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இச்சேகரம் 1933-1937, 1939-1940, 1944-1988 ஆகிய காலப்பகுதிகளுக்கான ஆவணங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் பெருளவிலான ஆவணங்கள் 1960, 1970 காலப்பகுதியைச் சேர்ந்தவை ஆகும்.

தனிப்பட்ட ஆவணங்கள் கடிதத் தொடர்பு, தனிப்பட்ட பொருட்கள், நிதி மற்றும் தேயிலைத் தோட்டத்துடன் தொடர்புடைய ஆவணங்கள், ஏனைய ஆவணங்களை உள்ளடக்கியுள்ளன. தொழில்சார் ஆவணங்கள் அலுவலகக் கோப்புகள், கட்சி ஆவணங்கள், கடிதத் தொடர்பு, ஏனைய ஆவணங்களை உள்ளடக்கியுள்ளன. நினைவஞ்சலி ஆவணங்கள் சுவரொட்டிகள், செய்தித்தாள் துணுக்குகள், நினைவஞ்சலிக் குறிப்பேடு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. இச்சேகரம் பின்வருமாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது:

  1. தனிப்பட்ட ஆவணங்கள்
    1.1. எஸ். ஜே. வி. செல்வநாயகம் தனிப்பட்ட கடிதத் தொடர்பு
    1.2. எஸ். ஜே. வி. மற்றும் எமிலி கிரேஸ் செல்வநாயகம் கடிதத் தொடர்பு
    1.3. எமிலி கிரேஸ் செல்வநாயகம் கடிதத் தொடர்பு
    1.4. தனிப்பட்ட பொருட்கள்/உடைமைகள்
    1.5. பல்வகை கடிதத் தொடர்பு
    1.6. பல்வகை குடும்ப ஆவணங்கள்
    1.7. நிதி ஆவணங்கள்
  2. தொழில்சார் ஆவணங்கள்
    2.1. தொழில்சார் கோப்புகள்
    2.2. தொழில்சார் கடிதத் தொடர்பு
    2.3. ஆவணங்கள்
    2.4. அச்சிடப்பட்ட ஆவணங்கள்
    2.5. சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட்/ சுதந்திரன்
    2.6. இலங்கை தமிழரசுக் கட்சி கோப்புகள்
  3. நினைவஞ்சலி ஆவணங்கள்

Chelvanayakam, Samuel James Velupillai

பண்டாரநாயக்கா, சிறிமாவோ - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

தனது மகனின் குடிவரவு தொடர்பாக திருமதி. பண்டாரநாயக்காவிற்கு செல்வநாயகம் எழுதிய கடிதம்.

பார் தம்பையா, ஜே. - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

பேணுகை நோக்குடன் ஒரு கடிதமும் இன்னொரு கடிதத்தின் துண்டும் ஒளிநகல் எடுக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய இராச்சியத் தூதரக உயர் ஆணையர் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

தனதும் தனது துணைவரினதும் மற்றும் சகோதரர், ஈ. வி. பொன்னுத்துரையினதும் பிரஜாவுரிமைத் துறப்பு தொடர்பாக செல்வநாயத்தால் எழுதப்பட்ட இரு கடிதங்களைக் கொண்டுள்ளது.

மனோகரன், ஏ. செல்வநாயகம் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

செல்வநாயகம் - மனோகரனுக்கிடையிலான கடிதங்களைக் கொண்டுள்ளது.

ரவீந்திரன், ஜே. செல்வநாயகம் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

இரவீந்திரனுக்கும் செல்வநாயத்திற்கும் இடையிலான கடிதத் தொடர்பினையும் செல்வநாயகத்தால் எழுதப்பட்ட ஆனால் அனுப்பப்படாத வரைவுக் கடிதங்களையும் கொண்டுள்ளது.

தேவதாசன், அருட்திரு. எஸ். எம். - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

கடிதத்தின் முதற்பக்கம் மட்டுமே உள்ளது. ஏனைய பக்கங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

வரதராஜக் குருக்கள், வி. - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

கோயில் குருக்கள் ஒருவர் செல்வநாயத்திற்கு விபூதி அனுப்பிய குறிப்பு.

[நிர்வாகம் தொடர்பான கடிதத் தொடர்பு எஸ். ஜே. வி. செல்வநாயகத்திற்கு அனுப்பப்பட்டவை]

தானுந்துகள், தட்டச்சுப் பொறிகள், வாடகை தொடர்பான கடிதங்கள்.

[எஸ். ஜே. வி. செல்வநாயகத்திற்கு அனுப்பப்பட்ட கவிதைகள்]

செல்வநாயத்திற்கு அனுப்பப்பட்ட கையால் எழுதப்பட்ட அல்லது தட்டச்சிடபட்ட அநாமதேயக் கவிதைகள், பத்திரிகைத் துணுக்குகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

[தமிழ்ப் பாடசாலைகள் - 2]

இக்கோப்பு மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தேர்தல் தொகுதியிலுள்ள பெரிய போரதீவு, முனைத்தீவு, ஒந்தாச்சிமடம் ஆகிய பிரதேசங்களில் இயங்கும் பாடசாலைகள், அவற்றின் நிலைமை, வாய்ப்புநலங்கள் பற்றாக்குறை தொடர்பான விவரமான கடிதத் தொடர்புகளைக் கொண்டுள்ளது. மேலும், யாழ். வலித்தூண்டல் ரோமன் கத்தோலிக்க பாடசாலைக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அளவெட்டியிலுள்ள பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பு ஆரம்பிப்பதற்கான அனுமதி பெறுகை தொடர்பான கடிதங்களையும் கொண்டுள்ளது.

[தமிழ் ஆசிரியர்கள் - நியமனம், இடமாற்றம், ஊதியம், இன்ன பிற]

இக்கோப்பு தமிழ் ஆசிரியர்களின் நியமனம், நியமன நீட்டிப்பு, இடமாற்றம், ஊதியப் பிரச்சினைகள் தொடர்பான கடிதத் தொடர்புகளைக் கொண்டுள்ளது. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களிடம் உதவி கோரி எழுதப்பட்ட கடிதங்களையும் பதிற் கடிதங்களையும் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களால் பல்வேறு கல்விசார் திணைக்களங்களுக்கு எழுதப்பட்ட கடிதங்களையும் கொண்டுள்ளது.

முடிவுகள் 1 இலிருந்து 50 இன் 3500 வரை