Print preview Close

Showing 3500 results

Archival description
Tamil
Print preview View:

இந்தியாவின் இசை / எச். ஏ. பொப்லி [நூல்]

நூலட்டையின் உட்பகுதியில் செல்வநாயகத்தின் கையொப்பமும் 22 நவம்பர் 1921 என்ற கையெழுத்தும் காணப்படுகிறது.

? பொன்னுத்துரை, ஏர்னஸ்ட் வேலுப்பிள்ளை கடிதம்

இக்கோப்பு திருமணக்கோரிக்கை ஒன்று தொடர்பில் பேபி என்ற கையெழுத்துடனான பெண்ணொருவர் பொன்னுத்துரைக்கு (செல்வநாயகம் அவர்களின் சகோதரர்) எழுதிய கடிதமொன்றைக் கொண்டுள்ளது.

பார் தம்பையா, ஜே. - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

பேணுகை நோக்குடன் ஒரு கடிதமும் இன்னொரு கடிதத்தின் துண்டும் ஒளிநகல் எடுக்கப்பட்டுள்ளன.

தேவதாசன், அருட்திரு. எஸ். எம். - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

கடிதத்தின் முதற்பக்கம் மட்டுமே உள்ளது. ஏனைய பக்கங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

தமிழ்ப் பத்திரிகை நிதி பற்றுச்சீட்டுக்களும் கட்டணக் கணக்கும்

இக்கோப்பு சந்தாதாரர் மற்றும் கட்டணத் தொகை போன்ற விபரங்களை உள்ளடக்கிய 10 பக்கங்களுடனான கணக்கு அறிக்கையினைக் கொண்டுள்ளது.

தமிழ்ப் பத்திரிகை நிதி சந்தாதாரர் பட்டியல்

168 சந்தாதாரர்கள், அவர்களின் வதிவிடம், செலுத்திய தொகை ஆகிய விபரங்களை உள்ளடக்கிய 5 பக்கங்களுடனான பட்டியலைக் கொண்டுள்ளது. திகதி குறிப்பிடப்படவில்லை.

[தொழில்சார் கடிதத் தொடர்பு]

இக்கோப்பு ஆர். மகாதேவா, ரி. டபிள்யூ. ஸ்ரான்ட்வெல், சி. எம். சின்னையா ஆகியோரால் செல்வநாயகத்திற்கு எழுதப்பட்ட கடிதங்களையும் அடையாளம் காணப்படாத கையெழுத்துடனான கடிதமொன்றையும் செல்வநாயகத்தால் ஏ. எம். குமாரசாமிக்கு எழுதப்பட்ட வரைவுக் கடிதமொன்றையும் கொண்டுள்ளது.

எஸ். ஜே. வி. செல்வநாயகம் - [?] கடிதம்

இக்கோப்பு "என் அன்புக்கினிய" என்னும் விளிப்புடனான ஒருவரை சந்தித்து உரையாடக் கோரி எழுதப்பட்ட பெயர்/அடையாளம் காண இயலாத கடிதமொன்றின் தட்டச்சுப் பிரதியினைக் கொண்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத் தூதரக உயர் ஆணையர் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

தனதும் தனது துணைவரினதும் மற்றும் சகோதரர், ஈ. வி. பொன்னுத்துரையினதும் பிரஜாவுரிமைத் துறப்பு தொடர்பாக செல்வநாயத்தால் எழுதப்பட்ட இரு கடிதங்களைக் கொண்டுள்ளது.

[தொழில்சார் கடிதத் தொடர்பு]

இக்கோப்பு இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், பிரான்ஸ் தூதர் அலுவலகம் ஆகியவற்றால் செல்வநாயகத்திற்கு எழுதப்பட்ட கடிதங்களைக் கொண்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி போராட்ட நிதி பற்றுச் சீட்டுப் புத்தகம்

போராட்ட நிதி பற்றுச் சீட்டுப் புத்தகம். பெறுமதி - 10 ரூபாய்; சீட்டு இலக்கம் 951-975

[அடையாளம் காணப்படாத கடிதத் தொடர்பு]

இக்கோப்பு செல்வநாயகம் அவர்களால் என். எம். பெரேரா [?], பாதுகாப்பு & வெளியுறவு அமைச்சுச் செயலாளர் மற்றும் அடையாளம் காணப்படாத ஏனையோருக்கு எழுதப்பட்ட வரைவுக் கடிதத் துணுக்குகளையும் (9 பக்கங்கள்) வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர் ஒருவருக்கான பதிலாள் நியமனம் தொடர்பான கையால் எழுதப்பட்ட கடிதப்பிரதி ஒன்றையும் கொண்டுள்ளது.

[தொழில்சார் கடிதத் தொடர்பு]

இக்கோப்பு 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் [?] செல்வநாயகம் அவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது மேற்கொள்ளப்பட்ட கடிதத் தொடர்புகளைக் கொண்டுள்ளது. கடிதப் பிரதிகள், துணுக்குகள் உள்ளிட்ட 34 கடிதங்களைக் கொண்டுள்ளது. வீட்டுக்காவல், ஆசிரியர்களின் கைதும் தடுப்புக்காவலும் போன்ற விடயங்கள் தொடர்பாக செல்வநாயகம் அவர்களால் குணசேன டி சொய்சா, என். எம். பெரேரா, கொள்ளுப்பிட்டி காவல் நிலையப் பொறுப்பதிகாரி, வணக்கத்துக்குரிய கே. எஸ். ஜெயசிங்கம், எப். ஆகஸ்டின் சவுந்தரநாயகம், கே. சிவகுரு, வி. சிவனாந்தம், ஏ. சண்முகநாதன், எஸ். நடராஜா, எஸ். சி. ரெஜினால்ட், வி. பொன்னுத்துரை ஆகியோருக்கு எழுதப்பட்ட கடிதங்களைக் கொண்டுள்ளது. மேலும், தடுப்புக்காவல், பாராளுமன்ற நடவடிக்கைகள், விவாதங்கள், முன்மொழிவுகள் தொடர்பாக சி. வன்னியசிங்கம், வி. ஏ. கந்தையா, கே. சிவகுரு, ஈ. எம். வி. நாகநாதன், என். பசுபதி, வி. என். நவரட்னம், எப். ஆகஸ்டின் சவுந்தரநாயகம், தலைமை ஆளுனரின் செயலாளர், ஏ. சண்முகநாதன், என். ஆர். இராஜவரோதயம் ஆகியோரால் செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்களைக் கொண்டுள்ளது. மேலும், கொள்ளுப்பிட்டி காவல்துறை மேலரால் எழுதப்பட்ட குறிப்பாணை ஒன்றினையும் சாவகச்சேரி காவல்துறையினர் தமது மனைவியையும் சகோதரியையும் துன்புறுத்தி கைது செய்தது தொடர்பாக வி. என். நவரத்தினம் அவர்களால் செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட தந்தி ஒன்றினையும் கொண்டுள்ளது.

[தொழில்சார் கடிதத் தொடர்பு]

இக்கோப்பு கே. சிவகுருநாதன், ஏ. சி. நடராஜா, பி. என். ரெஜினால்ட், பி. வி. பொன்னுத்துரை [?], ஆர். டபிள்யூ. வி. அரியநாயகம், எஸ். ஜே. வி. செல்வநாயகம், என். சிவநேசன் ஆகியோரால் இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் தடுப்புக் காவல் மற்றும் குருநாகல் கடை சூறையாடல், இதர விடயங்கள் தொடர்பாக எழுதப்பட்ட ஏழு கடிதங்களைக் கொண்டுள்ளது.

தமிழ்ப் பத்திரிகை நிதி செயற்குறிப்புகள்

இக்கோப்பு நன்கொடைக் குறிப்புகள், ஜி. ஜி. பொன்னம்பலம் நன்கொடைகள் தொடர்பாக நிர்வாகிகளுக்கு எழுதிய குறிப்பு, அச்சகம் மூடுகை தொடர்பாக 1958இல் எழுதப்பட்ட கடிதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பண்டாரநாயக்கா, எஸ். டபிள்யூ. ஆர். டி. & எஸ். ஜே. வி. செல்வநாயகம்

இக்கோப்பு செல்வநாயகம் அவர்களால் பிரதமருக்கு எழுதப்பட்ட தந்தி ஒன்றையும் செல்வநாயகம் அவர்களால் எழுதப்பட்ட இரு வரைவுக் கடிதத் துணுக்குகளையும் (3 பக்கங்கள்) தமிழ்மொழி (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமுன்வரைவு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தடுப்புக் காவல் தொடர்பாக எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் கொண்டுள்ளது.

சத்தியமூர்த்தி, எம்.

இக்கோப்பு சத்தியமூர்த்தி அவர்களால் எழுதப்பட்ட கடிதமொன்றின் இறுதிப் பக்கத்தைக் கொண்டுள்ளது. ஏனைய பக்கங்கள் தவறிப் போயுள்ளன. கடிதத்தின் பெறுநர் விபரங்கள் தெரியவில்லை.

[தொழில்சார் கடிதத் தொடர்பு]

இக்கோப்பு சி. இராஜதுரை அவர்களால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் இராணுவத்தால் சுடப்படுவது தொடர்பாக உடனடித் தலையீடு செய்யக் கோரி செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட தந்தியையும் அடையாளம் காணப்படாத தந்தி ஒன்றையும் வி. ஏ. கந்தையா, செல்லையாவினால் செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட மூன்று கடிதங்களையும் பாதுகாப்பு & வெளியுறவு அமைச்சுச் செயலாளரான குணசேன டி சொய்சாவின் கையெழுத்துடனான வீட்டுக் காவல் ஆணையின் பகுதி ஒன்றையும் கொண்டுள்ளது.

[எம். காத்தமுத்து தந்தி]

இக்கோப்பு மொரக்கொட்டாஞ்சேனை ஊர்மக்கள் மீதான காவல்துறை மற்றும் இராணுவத்தினரின் முறைகேடான நடத்துகை, வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீவைப்பு தொடர்பாக எம். காத்தமுத்துவால் எழுதப்பட்ட தந்தியைக் கொண்டுள்ளது.

[தொழில்சார் கடிதத் தொடர்பு]

இக்கோப்பு சி. சோமசேகரம், பி. கொஸ்வத்தை, எஸ். ஜே. வி. செல்வநாயகம், சி. பி. சி. முத்துக்குமாரசாமி ஆகியோரால் எழுதப்பட்ட நான்கு கடிதங்களைக் கொண்டுள்ளது.

Results 1 to 50 of 3500