Showing 3500 results

Archival description
Tamil
Print preview View:

திருகோணமலையைச் சேர்ந்த திரு. ஞா. லூக்காஸ் இ. த. அ. கட்சியின் பொதுச் செயலாளருக்கு எழுதிய கடிதம்

இக்கடிதத்தில் திரு. ஞா. லூக்கஸ், நகராண்மைக்கழகம் தொடர்பிலான நிகழ்ச்சிகள் இருப்பதனால், தன்னால் நடக்கவிருக்கும் செயற்குழு கூட்டத்திற்கு வருகை தரமுடியாமை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதனால், செயற்குழுவினால் எடுக்கப்படவிருக்கும் எல்லவித முடிவுகளுக்கும் மனப்பூர்வ ஒப்புதலை முன்கூட்டியே தெரிவித்துள்ளார்.

செல்வநாயகத்தினால் செயற்குழு கூட்டத்திற்கு சமூகமளிக்காத அங்கத்தவர்களுக்கு எழுதப்பட்ட கடிதம்

இக்கடித்தில், செயற்குழுக் கூட்டத்தின் முக்கியத்துவதைப் பற்றியும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளை தவிர எதிர்காலத்தில் எந்த ஒரு கூட்டத்தையும் தவறாது சமூகமளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இதில் 4 அங்கத்தவர்களின் பெயர்களை கைப்பட எழுதியுள்ளார்.

திரு. சி. ராமையயாவினால் திரு. க. சிவானந்தசுந்தரமுக்கு எழுதப்பட்ட கடிதம்

இந்த கடிதத்தில், திரு. எஸ். ராமையா, கட்சியின் புதிய உறுப்பினர் படிவத்தை கடந்த கடிதத்தில் பெறவில்லை என்றும், அதை அவருக்கு அனுப்புமாறு திரு. க. சிவானந்தசுந்தரத்திடம் கேட்டுள்ளார்.

இ. த. அ. கட்சியின் முதலாவது மத்திய செயற்குழுக் கூட்டக் குறிப்புகள்

இந்த கூட்டம் 14-10-1962 அன்று 16, ஆல்பர்ட் ஹவுஸ் கார்டனில் நடைபெற்றது. கட்சித் தலைவர் திரு. சி. மூ. ராசமணிகம் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை, எனவே துணைத் தலைவர் திரு. நா. இ. ராசவரோதயம் கூட்டத்தில் 25 உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார். இந்த சந்திப்புக் குறிப்பு 4 முக்கிய விட்யங்களையும், கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட மலையக-தமிழர்கள் தொடர்பான சில விட்யங்களையும் சுருக்கமாகக் கூறுகிறது.

பொதுக்குழு உறுப்பினர் திரு. க. சோ. செல்லத்துரை அவர்கள் இ. த. அ. கட்சியின் நிர்வாகச் செயலாளருக்கு எழுதியக் கடிதம்

இந்த கடிதத்தில், திரு. கே.எஸ்.செல்லத்துரை 1963 ஜனவரி 27 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் முன்வைக்க வேண்டிய தீர்மானத்தை எழுதியுள்ளார். ஏப்ரல் 1961 இல் தமிழ் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், முதலிக்குளம் குடியேற்றத்தில் தமிழ் குடியேறியவர்களின் சாகுபடி செய்யப்படாத நிலங்களை ரத்து செய்ய இலங்கை அரசாங்கம் முயற்சித்தது. திருகோணமலை தொழிலாளர் கூட்டுறவு சங்கம் தான் நிலங்களுக்கு பணம் கொடுத்து அதை அரசிடமிருந்து மீட்டது. இதன் விளைவாக, திருகோணமலை கூட்டுறவு சங்கத்திற்கு அந்த பணத்தை கட்சியின் பணத்திலிருந்து ஈடுசெய்ய கட்சி முடிவு செய்துள்ளது. இந்த தீர்மானத்தை செயல்படுத்தக் கட்சியின் பொருளாளர் அதிகாரம் பெற்றவர். மேலும், 27.01.63 அன்று எழுதப்பட்ட பக்க குறிப்பு ஒன்றில் ரூ. 2000 கடன் பணத்தை திருகோணமலைக்கு கொடுக்க திரு. ராசவரோதயத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆறாவது மத்திய செயற்குழு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் (இன்னுமொரு கூடுதல் நகல்)

ஆறாவது மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 16-17 திகதி மார்ச் மாதம் 1963 கிளினொச்சியில் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வெளியில் இருந்து பயணிக்கும் அங்கத்தவர்களுக்கு திரு. அ. சிவசுந்தரம் அவர்கள் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நிர்வாகச் செயலாளர் திரு. க. சிவானந்தசுந்தரம் மற்றும் பொதுச் செயலாளர் திரு. இ. மு. வி. நாகநாதன் இருவராலும் கையொப்பமிடப்பட்டு கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இ. த. அ. கட்சியின் நிர்வாகச் செயலாளர், க. சிவானந்தசுந்தரம் அவர்களுக்கு தெல்லிப்பழையைச் சார்ந்த தி. க. இராஜசேகரன் எழுதியக் கடிதம்

இக்கடிதத்தில், திரு. தி. க. இராஜசேகரன் அவர்கள் தன்னால் ஆறாவது மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். அதனால், யாழ்ப்பாணம் நகரில் பல போலீசார் மற்றும் இராணுவப் படைகள் வந்திருப்பதாகவும், அவர்களின் வருகையின் அவசியம் குறித்து அங்கத்தவர்களுடன் கலந்துரையாட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இ. த. அ. கட்சியின் பொதுச் செயலாள்ருக்கு தெல்லிப்பளையைச் சார்ந்த திரு. சி. பொ. வேலுப்பிள்ளை எழுதியக் கடிதம்

இந்த கடிதத்தில், திரு. சி. பொ. வேலாயுதபிள்ளை தனது தனிப்பட்ட காரணங்களுக்காக மத்திய செயற்குழு உறுப்பினர் பதவியைவிட்டு விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இக்கடிதத்தினை ஏப்ரல் 7, 1963 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் ஆங்கிலத்தில் ஒரு சிறிய குறிப்பு எழுதப்பட்டுள்ளது.

திரு. க. சிவானந்தசுந்தரம் அவர்களுக்கு திரு. சு. குணநாயகம் எழுதிய பதவி விலகல் கடிதம்

இக்கடிதத்தில், திரு. சு. குணநாயகம் அவர்கள் தனக்கு கிராம சேவையாளராகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளமையால் இ. த. அ. கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாகவும் எங்கு சென்றாலும் தமிழர்களுக்கான அவரது பணி தொடரும் எனவும் கட்சியின் செயலாளர் திரு. சிவானந்தசுந்தரம் அவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

இ,த,அ. கட்சி தலைவர் திரு. இ. மூ, இராசமாணிக்கம் அவர்கள் திரு. ஆர். எம். ராமய்யா அவர்களின் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவியை உறுதிப்படுத்தி கைப்பட எழுதி அனுப்பியக் கடிதம்

இக்கடிதத்தில், கட்சியின் அமைப்பு விதி 8 (அ) (4) இன் படி திரு. ஆர். எம். ராமய்யா அவர்களை மத்திய செயற்குழு அங்கத்தவராக கட்சித் தலைவர் நியமித்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கட்சி அமைப்பு விதி (7) என் படி இவர் பொதுக்காரியசபை உறுப்பினரும் ஆவார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

திரு. சா. ஜே. வே. செல்வநாயகம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ந. இ. ராசவரோதயமிற்கு அனுப்பியக் கடிதம்

பாராளுமன்ற உறுப்பினர் திரு. ந. இ. ராசவரோதயம் அவர்கள் கடந்த 4 மத்திய செயற்குழு கூட்டங்களிற்கு வருகை தரவில்லை எனவும், தயவு செய்து அடுத்தக் கூட்டத்திற்கு தவறாது வருகை தருமாரும் திரு. சா. ஜே. வே. செல்வநாயகம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

Results 1 to 50 of 3500