Affichage de 3500 résultats

Description archivistique
Tamoul
Aperçu avant impression Affichage :

சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம் 

  • UTSC 014
  • collection
  • n.d., 1921, 1929-1930, 1933-1937, 1939-1940, 1944-1988

விளங்கியமையையும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாளாந்த நடவடிக்கைகளையும் இச்சேகரம் பிரதிபலிக்கிறது.

இச்சேகரம் இலங்கையில் 1950 இலிருந்து 1970 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற முக்கியமான அரசியல் நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதோடு இலங்கைத் தமிழர்கள் எதிர்கொண்ட போராட்டங்களுக்கு சாட்சியமாகவும் விளங்குகிறது.

இச்சேகரம் செல்வநாயகம் அவர்களின் குடும்பம், பின்புலம் தொடர்பான ஆவணங்களையும் அவரது துணைவியார் எமிலி கிரேஸ் செல்வநாயகம் சேகரித்த நினைவஞ்சலி ஆவணங்களையும் கொண்டுள்ளது. மூன்று பிரதான வரிசைகளாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இச்சேகரம் 1933-1937, 1939-1940, 1944-1988 ஆகிய காலப்பகுதிகளுக்கான ஆவணங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் பெருளவிலான ஆவணங்கள் 1960, 1970 காலப்பகுதியைச் சேர்ந்தவை ஆகும்.

தனிப்பட்ட ஆவணங்கள் கடிதத் தொடர்பு, தனிப்பட்ட பொருட்கள், நிதி மற்றும் தேயிலைத் தோட்டத்துடன் தொடர்புடைய ஆவணங்கள், ஏனைய ஆவணங்களை உள்ளடக்கியுள்ளன. தொழில்சார் ஆவணங்கள் அலுவலகக் கோப்புகள், கட்சி ஆவணங்கள், கடிதத் தொடர்பு, ஏனைய ஆவணங்களை உள்ளடக்கியுள்ளன. நினைவஞ்சலி ஆவணங்கள் சுவரொட்டிகள், செய்தித்தாள் துணுக்குகள், நினைவஞ்சலிக் குறிப்பேடு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. இச்சேகரம் பின்வருமாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது:

  1. தனிப்பட்ட ஆவணங்கள்
    1.1. எஸ். ஜே. வி. செல்வநாயகம் தனிப்பட்ட கடிதத் தொடர்பு
    1.2. எஸ். ஜே. வி. மற்றும் எமிலி கிரேஸ் செல்வநாயகம் கடிதத் தொடர்பு
    1.3. எமிலி கிரேஸ் செல்வநாயகம் கடிதத் தொடர்பு
    1.4. தனிப்பட்ட பொருட்கள்/உடைமைகள்
    1.5. பல்வகை கடிதத் தொடர்பு
    1.6. பல்வகை குடும்ப ஆவணங்கள்
    1.7. நிதி ஆவணங்கள்
  2. தொழில்சார் ஆவணங்கள்
    2.1. தொழில்சார் கோப்புகள்
    2.2. தொழில்சார் கடிதத் தொடர்பு
    2.3. ஆவணங்கள்
    2.4. அச்சிடப்பட்ட ஆவணங்கள்
    2.5. சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட்/ சுதந்திரன்
    2.6. இலங்கை தமிழரசுக் கட்சி கோப்புகள்
  3. நினைவஞ்சலி ஆவணங்கள்

Chelvanayakam, Samuel James Velupillai

சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட்/ சுதந்திரன்

சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட் ஒரு நிறுவனமாக 1946 ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்டது. இதில் செல்வநாயகம் இயக்குநர்களுள் ஒருவராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். 1947 இலிருந்து 1983 வரையான காலப்பகுதியில் இந்நிறுவனம் சுதந்திரன் என்னும் தமிழ் செய்தித்தாளை வெளியிட்டது. 2 ஜூன் இலிருந்து 20 அக்டோபர் வரை அவசரகால சட்டத்தின் கீழ் இச்செய்த்தித்தாள் வெளியீடு அரசாங்கத்தால் நிறுத்தி வைக்கப்படிருந்தது.

இவ்வரிசை கணக்கு அறிக்கைகள், குறிப்பாணைகள், அறிக்கைகள், செய்தித்தாள் தொடர்பான கடிதத் தொடர்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

1975 தேர்தல் வெற்றி தொடர்பாக எஸ். ஜே. வி. செல்வநாயகத்திற்கு அனுப்பப்பட்ட தந்திகள்

இக்கோப்பு செல்வநாயகம் அவர்களின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்து பல்வேறு தனிநபர்களாலும் அமைப்புகளாலும் செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட 21 தந்திகளைக் கொண்டுள்ளது.

சத்தியமூர்த்தி, எம்.

இக்கோப்பு சத்தியமூர்த்தி அவர்களால் எழுதப்பட்ட கடிதமொன்றின் இறுதிப் பக்கத்தைக் கொண்டுள்ளது. ஏனைய பக்கங்கள் தவறிப் போயுள்ளன. கடிதத்தின் பெறுநர் விபரங்கள் தெரியவில்லை.

குணரத்தினம், கே. - உள்ளூராட்சி அலுவல்கள் திணைக்களம் கடிதம்

இக்கோப்பு விவசாயிகளின் வேளாண்மை நடவடிக்கைகளுக்குப் பயன்தரும் நோக்கில் குரும்பசிட்டியில் மின்மாற்றி ஒன்றினை நிறுவுவது தொடர்பாக கே. குணரத்தினம் அவர்களால் உட்துறை அலுவல்கள் திணைக்களத்துக்கு எழுதப்பட்ட கடிதமொன்றைக் கொண்டுள்ளது.

குமரலிங்கம்

வழக்குரைஞர் குமாரலிங்கம் அவர்களால் ஜனாதிபதி அவர்களுக்கு எழுதப்பட்ட வரைவுக் கடிதமொன்றின் [?] இறுதிப் பக்கத்தைக் கொண்டுள்ளது.

கண்ணகி நூலகம் - சுகாதார அமைச்சர் கடிதம்

இக்கோப்பு வல்வெட்டித்துறைக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த மீனவ சமூகங்களுக்கு அருகாமையில் மருத்துவமனை ஒன்று அமைப்பதன் தேவை தொடர்பாக கண்ணகி நூலகத்தினரால் சுகாதார அமைச்சருக்கு எழுதப்பட்ட கடிதமொன்றைக் கொண்டுள்ளது. இக்கடிதம் மீனவர்கள் சுகாதார சேவைகள் அணுக்கத்தில் எதிர்கொள்ளும் இன்னல்களை விவரித்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கு இதய மற்றும் பொது நோய்ப் பிரிவுகளை இணைப்பதற்கான பரிந்துரைகளையும் விவரிக்கிறது. மேலும், இக்கடிதம் மயிலிட்டி கிராமம், மீனவர்கள், அவர்களது வாழ்வியல், அவர்களது வசிப்பிடத்திற்கும் தொழில் புரியும் பிரதேசங்களுக்கும் அருகாமையில் மருத்துவமனை ஒன்றிருப்பதன் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் தொடர்பான விரிவான குறிப்புக்களைக் கொண்டுள்ளது.

கணபதிப்பிள்ளை, நாகலிங்கம்

நாகலிங்கம் அவர்களின் நியமனம், இடமாற்ற விருப்பம் தொடர்பான குறிப்பொன்றைக் கொண்டுள்ளது.

கல்வளைசேயோன், கே. - எஸ். கதிரவேற்பிள்ளை கடிதம்

இக்கோப்பு கபரகலை - வத்தேகம பாடசாலைப் பேருந்து செல்வழி தொடர்பாக கே. கல்வளைசேயோன் அவர்களால் எஸ். கதிரவேற்பிள்ளை அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமொன்றைக் கொண்டுள்ளது. தினமும் பாடசாலை செல்வதற்கு தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் எதிர்கொள்ளும் இன்னல்கள், சிரமங்கள் தொடர்பாகவும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான பரிந்துரைகளையும் இக்கடிதம் விபரிக்கிறது.

இலங்கை ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்கள் லிமிட்டெட்

இக்கோப்பு இலங்கை ஆழ்கடல் மீன்பிடி நிறுவனமான சிலோன் ட்ரோலர்ஸ் லிமிட்டட் நிறுவனம் தொடர்பான பின்வரும் ஆவணங்களைக் கொண்டுள்ளது: பொதுக் கூட்டம் தொடர்பாக பங்குதாரருக்கு அறிவிப்பு, பதிலாள் படிவம், இலாப நட்ட கணக்கு அறிக்கைகள்.

எஸ். ஜே. வி. செல்வநாயகம் - திருமதி. ஏ. சுந்தரம்பிள்ளை கடிதம்

செல்வநாயகம் அவர்களால் எழுதப்பட்ட வரைவுக் கடிதம்.

எஸ். ஜே. வி. செல்வநாயகம் & ஏ. சிவசுந்தரம்

இக்கோப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சி செயற்குழுக் கூட்டங்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கட்சி நிதிகளும் கணக்குகளும், சத்தியாக்கிரக இயக்கம், அவசரகால நிலைமை, பாராளுமன்ற தொழிற்சங்கம்?, சிங்களத்தில் கடிதங்கள், காங்கேசன்துறை துறைமுகம், நெல்லியடி நகரசபை, யாழ்ப்பாண நகர முதல்வர் தேர்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக செல்வநாயகம் அவர்களுக்கும் ஏ. சிவசுந்தரம் அவர்களுக்குமிடையிலான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது.

எஸ். ஜே. வி. செல்வநாயகம் - டட்லி சேனாநாயக்கா கடிதம்

இக்கோப்பு மொழி உரிமைகள், மாவட்ட சபைகள், தமிழருக்கான பல்கலைக்கழகம், தமிழ் பட்டதாரிகளிடையே வேலையின்மை, தமிழ்ப் பிரதேசங்களில் அபிவிருத்தி பணிகள், காங்கேசன்துறை துறைமுகம், குடியுரிமை போன்ற விடயங்கள் தொடர்பாக செல்வநாயகம் அவர்களால் பிரதமர் டட்லி சேனநாயக்கவுக்கு எழுதப்பட்ட நான்கு கடிதங்களைக் கொண்டுள்ளது.

தொழில்சார் கடிதத் தொடர்பு

இவ் உபவரிசை பின்வரும் ஒழுங்குமுறைமையைக் கொண்ட கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது: ஆரம்பகால தொழில்சார் கடிதத் தொடர்பு (பிரதானமாக 1940 பிற்பகுதி மற்றும் 1950 களைச் சேர்ந்தவை); செல்வநாயகம் அவர்களுடனான கடிதத் தொடர்பு, செல்வநாயகம் தவிர்ந்த ஏனையோரால் எழுதப்பட்ட/பெற்றுக் கொள்ளப்பட்ட பல்வகைக் கடிதத் தொடர்பு.

ஆரம்பகால தொழில்சார் கடிதத் தொடர்பு (1940-1950 காலப்பகுதி) காலவரிசைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்கள் பலர் இக்காலப்பகுதியில் வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்படிருந்தமையால் எழுத்துமூலமான கடிதத் தொடர்பு அதிகரித்திருந்தது. இக்காலப்பகுதியினைச் சேர்ந்த ஆவணங்கள் அரிதாகவே காணப்படுகின்றன. ஏனைய கடிதத் தொடர்புகள் அனைத்தும் ஆங்கில அகரவரிசைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

தொழில்சார் கடிதத் தொடர்பு பல்வகை ஆவணங்களைக் கொண்ட பெட்டிகளிலிருந்து ஆவணக்காப்பாளரால் அடையாளம் காணப்பட்டு கடிதம் அனுப்பியவர் பெயரின் ஆங்கில அகரவரிசைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இக்கடிதத் தொடர்பு தொழில்சார் கோப்புகளிலிருந்து தனித்து கண்டெடுக்கப்பட்டது எனினும் தலைப்பு/ விடயப்பொருள் அடிப்படையில் மேற்பொருந்தலாம்.

வட்டுக்கோட்டை தொகுதி - பெயர் பட்டியல்

பக்கம் (ஆ), பக்கம் (அ)வின் பின்புறம்.திகதியிடப்பட்ட சு. ம. மாணிக்கராசா (திருக்கோணமலை நெசவு நிலையத் தலைவர்) - திருக்கோணமலை மக்கள் அறிவித்தல் பக்கம் (ஆ)வில் இணைக்கப்பட்டுள்ளது.

[இலங்கைத் தமிழரசுக் கட்சி வட்டுக்கோட்டை கிளை]

இக்கோப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை கிளை தொடர்பான கடிதங்கள், தபாலட்டைகள், கிளைச் செயற்பாடுகள், உறுப்புரிமை சந்தா பட்டியல் போன்ற ஆவணங்களைக் கொண்டுள்ளது.

[விடுதலைப் பரணி]

இக்கோப்பு விடுதலைப் பரணி வெளியீடு, அதனுடன் தொடர்புடைய செலவினங்கள் குறித்த இரு கடிதங்களைக் கொண்டுள்ளது.

[பொதுத் தேர்தல் - 1965]

இக்கோப்பு 1965 பொதுத் தேர்தல் தொடர்பான ஆவணங்களைக் கொண்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் முன்னேற்பாடுகள், பரப்புரைகள், வேட்பாளர் நியமன விண்ணப்பங்கள், முன்மொழிவுகள், தேர்தல் நிதி சேகரிப்பு போன்ற விடயங்களை உள்ளடக்கிய கடிதங்கள், தந்திகள், கையால் எழுதப்பட்ட விண்ணப்பங்கள், செலவினங்கள், கணக்குகள், செய்தித்தாள் துணுக்குகள் ஆகிய ஆவணங்களைக் கொண்டுள்ளது. மேலும், வேட்பாளர் பட்டியல்கள் சிலவற்றையும் சிலோன் டெய்லி நியூஸில் 1960 இல் வெளிவந்த தேர்தல் குறித்த கட்டுரையொன்றினையும் கொண்டுள்ளது.

Résultats 1 à 50 sur 3500