அச்சு முன்காட்சி மூடுக

Showing 3500 results

Archival description
தமிழ்
அச்சு முன்காட்சி View:

நிதி ஆவணங்கள்

இவ்வரிசை விலைப்பட்டியல்கள், அறிக்கைகள் போன்ற நிதிசார் ஆவணங்களையும் கணக்குகள் தேயிலைத் தோட்டங்கள் தொடர்பான கடிதத் தொடர்புகளையும் கொண்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி கோப்புகள்

இவ்வரிசை அச்சிடப்பட்ட ஆவணங்கள், கடிதத் தொடர்பு, நிர்வாக ஆவணங்கள் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பல்வேறு கட்சிக் கிளைகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பல்வகை குடும்ப ஆவணங்கள்

இவ்வரிசை குறிப்புகள், இறை சேவை சிறுவெளியீடுகள், நிலப் பங்கு ஆவணங்கள் போன்ற பல்வகை குடும்ப ஆவணங்களைக் கொண்டுள்ளது.

சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட்/ சுதந்திரன்

சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட் ஒரு நிறுவனமாக 1946 ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்டது. இதில் செல்வநாயகம் இயக்குநர்களுள் ஒருவராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். 1947 இலிருந்து 1983 வரையான காலப்பகுதியில் இந்நிறுவனம் சுதந்திரன் என்னும் தமிழ் செய்தித்தாளை வெளியிட்டது. 2 ஜூன் இலிருந்து 20 அக்டோபர் வரை அவசரகால சட்டத்தின் கீழ் இச்செய்த்தித்தாள் வெளியீடு அரசாங்கத்தால் நிறுத்தி வைக்கப்படிருந்தது.

இவ்வரிசை கணக்கு அறிக்கைகள், குறிப்பாணைகள், அறிக்கைகள், செய்தித்தாள் தொடர்பான கடிதத் தொடர்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பல்வகைக் கடிதத் தொடர்பு

இவ்வரிசை 16 அல்பிரட் ஹவுஸ் கார்டின்ஸ் இனை வதிவிடமாகக் கொண்ட செல்வநாயகம் குடும்பத்தைச் சேர்ந்த ஏனையோருக்குச் சொந்தமான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது. மேலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகம் செல்வநாயகம் அவர்களின் வீட்டில் இயங்கியபோது அங்கு பணிபுரிந்த சிலரின் தனிப்பட்ட பொருட்கள் சிலவற்றையும் கொண்டுள்ளது.

தனிப்பட்ட பொருட்கள்

இவ்வரிசை எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்குச் சொந்தமான தனிப்பட்ட பொருட்களையும் எமிலி கிரேஸ் செல்வநாயகத்திற்குச் சொந்தமான பொருளொன்றினையும் கொண்டுள்ளது.

அச்சிடப்பட்ட ஆவணங்கள்

இவ் உபவரிசை சிறுவெளியீடுகள், சுவரொட்டிகள், செய்தித்தாள் துணுக்குகள், குறிப்பாணைகள், அறிக்கைகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

எமிலி கிரேஸ் செல்வநாயகம் கடிதத் தொடர்பு

இவ்வரிசை எமிலி கிரேஸ் செல்வநாயகம் அவர்களை விளித்து எழுதப்பட்ட தனிப்பட்ட கடிதத் தொடர்பினைக் கொண்டுள்ளது. கடிதங்கள் எழுதியவர் பெயரினை அடிப்படையாகக் கொண்டு ஆங்கில அகரவரிசைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

மேலும், ஏப்ரல் 1977 இல் செல்வநாயகம் அவர்களின் மறைவைத் தொடர்ந்து எமிலி கிரேஸ் செல்வநாயகம் அவர்களுக்கு அனுப்பப்பட்ட பல இரங்கற் கடிதங்களையும் தந்திகளையும் இவ்வரிசை கொண்டுள்ளது. குடும்பத்தினரின் தனிப்பட்ட இரங்கற் கடிதங்கள் தனிப்பட்ட ஒரு கோப்பில் காலவரிசைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இரங்கற் கடிதங்களும் தந்திகளும் அவை பெற்றுக்கொள்ளப்பட்ட திகதிவாரியான மூல ஒழுங்கின்படி ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

ஆவணங்கள்

இவ் உபவரிசை அறிக்கைகள், கடிதத் தொடர்பு, சட்ட ஆவணங்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. மேலும், இது பூச்சி அரிப்பினால் குறிப்பிடத்தக்க சேதாரத்துடன் காணப்படும் கடிதங்கள் மற்றும் ஆவணங்களைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக இவற்றின் பின்புலத்தை அறிய முடியாதுள்ளது. இவ் ஆவணங்கள் தொழில்சார் கோப்புகளுடன் தொடர்புடையனவே எனினும், இவை ஏனைய பல்வகை கோப்புகளின் மத்தியில் கண்டெடுக்கப்பட்டு ஆவணக்காப்பாளரினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

எஸ். ஜே. வி. மற்றும் எமிலி கிரேஸ் செல்வநாயகம் கடிதத் தொடர்பு

இவ்வரிசை எஸ்.ஜே. வி. செல்வநாயகம் மற்றும் எமிலி கிரேஸ் செல்வநாயகம் ஆகிய இருவரையும் விளித்து எழுதப்பட்ட தனிப்பட்ட கடிதத் தொடர்பினைக் கொண்டுள்ளது. கடிதங்கள் எழுதியவர் பெயரினை அடிப்படையாகக் கொண்டு ஆங்கில அகரவரிசைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

தொழில்சார் கடிதத் தொடர்பு

இவ் உபவரிசை பின்வரும் ஒழுங்குமுறைமையைக் கொண்ட கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது: ஆரம்பகால தொழில்சார் கடிதத் தொடர்பு (பிரதானமாக 1940 பிற்பகுதி மற்றும் 1950 களைச் சேர்ந்தவை); செல்வநாயகம் அவர்களுடனான கடிதத் தொடர்பு, செல்வநாயகம் தவிர்ந்த ஏனையோரால் எழுதப்பட்ட/பெற்றுக் கொள்ளப்பட்ட பல்வகைக் கடிதத் தொடர்பு.

ஆரம்பகால தொழில்சார் கடிதத் தொடர்பு (1940-1950 காலப்பகுதி) காலவரிசைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்கள் பலர் இக்காலப்பகுதியில் வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்படிருந்தமையால் எழுத்துமூலமான கடிதத் தொடர்பு அதிகரித்திருந்தது. இக்காலப்பகுதியினைச் சேர்ந்த ஆவணங்கள் அரிதாகவே காணப்படுகின்றன. ஏனைய கடிதத் தொடர்புகள் அனைத்தும் ஆங்கில அகரவரிசைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

தொழில்சார் கடிதத் தொடர்பு பல்வகை ஆவணங்களைக் கொண்ட பெட்டிகளிலிருந்து ஆவணக்காப்பாளரால் அடையாளம் காணப்பட்டு கடிதம் அனுப்பியவர் பெயரின் ஆங்கில அகரவரிசைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இக்கடிதத் தொடர்பு தொழில்சார் கோப்புகளிலிருந்து தனித்து கண்டெடுக்கப்பட்டது எனினும் தலைப்பு/ விடயப்பொருள் அடிப்படையில் மேற்பொருந்தலாம்.

எஸ். ஜே. வி. செல்வநாயகம் தனிப்பட்ட கடிதத் தொடர்பு

Subseries contains Chelvanayakam’s correspondence that is personal in nature, including correspondence with family. Letters are mostly addressed to Chelvanayakam but letters from Chelvanayakam exist where he made copies. Letters are arranged alphabetically (in English) by the correspondent’s name. 

தொழில்சார் கோப்புகள்

இவ் உபவரிசை இலங்கை தமிழரசுக் கட்சியின் நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது.

நினைவஞ்சலி ஆவணங்கள்

இவ்வரிசை 26 ஏப்ரல் 1977 ஆம் ஆண்டு செல்வநாயகம் அவர்களின் மறைவினைத் தொடர்ந்து எழுதப்பட்ட அவரின் நினைவஞ்சலி சார் ஆவணங்களைக் கொண்டுள்ளது. இரங்கற் செய்திகளுடனான குறிப்பேடு, செய்தித்தாள் துணுக்குகள், இறுதிச் சடங்கு மற்றும் நீத்தார் நினைவு சிறுவெளியீடுகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள், தனிநபர்களால் அச்சிடப்பட்ட செல்வநாயகம் நினைவஞ்சலி சுவரொட்டிகள், அறிக்கைகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

தொழில்சார் ஆவணங்கள்

இவ்வரிசை இலங்கை தமிழரசுக் கட்சியின் நாளாந்த நடவடிக்கைகளையும் இலங்கையில் 1950 இலிருந்து 1970 வரையான காலப்பகுதியின் தமிழர் வாழ்வியலையும் போராட்டங்களையும் பிரதிபலிக்கிறது. தேர்தல் தொடர்பான ஆவணங்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்குமிடையிலான கடிதத் தொடர்பு, அரசியல் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான கடிதத் தொடர்பு, ஏனைய நிர்வாக ஆவணங்கள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.

1961 இல் செல்வநாயகம் ஸ்கொட்லாந்தின் எடின்பர்க் நகரிலுள்ள ஒரு மருத்துவமனையில் பார்க்கின்சனின் நோய்க்கான சத்திரசிகிச்சையை முடித்துவிட்டு தங்கியிருந்தார். இக்காலப்பகுதியில் செல்வநாயகம் தனிப்பட்ட மற்றும் தொழில்சார் கடிதங்கள் பலவற்றினை எழுதியுள்ளார். இக்கடிதங்களை அனுப்பியவரின் பெயரின் கீழ் தனிப்பட்ட மற்றும் தொழில்சார் கோப்புகளுள் காணலாம்.

இவ்வரிசை ஆறு (6) உபவரிசைகளை உள்ளடக்கியுள்ளது:
2.1 தொழில்சார் கோப்புகள்
2.2 தொழில்சார் கடிதத் தொடர்பு
2.3 ஆவணங்கள்
2.4 அச்சிடப்பட்ட ஆவணங்கள்
2.5 சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட்/ சுதந்திரன்
2.6 இலங்கை தமிழரசுக் கட்சி கோப்புகள்

தனிப்பட்ட ஆவணங்கள்

இவ்வரிசை எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களினதும் அவரது துணைவியாரான எமிலி கிரேஸ் செல்வநாயகம் அவர்களினதும் தனிப்பட்ட ஆவணங்களைக் கொண்டுள்ளது. மேலும், 16 அல்பிரட் ஹவுஸ் கார்டின்ஸில் வசித்த அல்லது பணிபுரிந்த ஏனைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் தனிப்பட்ட ஆவணங்களையும் கொண்டுள்ளது.

இவ்வரிசை ஏழு உபவரிசைகளை உள்ளடக்கியுள்ளது:

1.1 எஸ். ஜே. வி. செல்வநாயகம் தனிப்பட்ட கடிதத் தொடர்பு
1.2 எஸ். ஜே. வி. மற்றும் எமிலி கிரேஸ் செல்வநாயகம் கடிதத் தொடர்பு
1.3 எமிலி கிரேஸ் செல்வநாயகம் கடிதத் தொடர்ப
1.4 தனிப்பட்ட பொருட்கள்
1.5 பல்வகை கடிதத் தொடர்பு
1.6 பல்வகை குடும்ப ஆவணங்கள்
1.7 நிதி ஆவணங்கள்

முடிவுகள் 1 இலிருந்து 50 இன் 3500 வரை