Showing 3500 results

Archival description
Tamil
Advanced search options
Print preview View:

[இலங்கைத் தமிழரசுக் கட்சி வட்டுக்கோட்டை கிளை]

இக்கோப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை கிளை தொடர்பான கடிதங்கள், தபாலட்டைகள், கிளைச் செயற்பாடுகள், உறுப்புரிமை சந்தா பட்டியல் போன்ற ஆவணங்களைக் கொண்டுள்ளது.

[விடுதலைப் பரணி]

இக்கோப்பு விடுதலைப் பரணி வெளியீடு, அதனுடன் தொடர்புடைய செலவினங்கள் குறித்த இரு கடிதங்களைக் கொண்டுள்ளது.

[பொதுத் தேர்தல் - 1965]

இக்கோப்பு 1965 பொதுத் தேர்தல் தொடர்பான ஆவணங்களைக் கொண்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் முன்னேற்பாடுகள், பரப்புரைகள், வேட்பாளர் நியமன விண்ணப்பங்கள், முன்மொழிவுகள், தேர்தல் நிதி சேகரிப்பு போன்ற விடயங்களை உள்ளடக்கிய கடிதங்கள், தந்திகள், கையால் எழுதப்பட்ட விண்ணப்பங்கள், செலவினங்கள், கணக்குகள், செய்தித்தாள் துணுக்குகள் ஆகிய ஆவணங்களைக் கொண்டுள்ளது. மேலும், வேட்பாளர் பட்டியல்கள் சிலவற்றையும் சிலோன் டெய்லி நியூஸில் 1960 இல் வெளிவந்த தேர்தல் குறித்த கட்டுரையொன்றினையும் கொண்டுள்ளது.

[திருமண தங்க ஆபரணங்கள்]

இக்கோப்பு தமிழ்த் திருமணங்களில் பயன்படுத்தப்படும் தாலிக்கொடி உருவாக்குவதற்கான தங்கத்தைக் கொள்வனவு செய்வதிலுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பான இரு கடிதங்களைக் கொண்டுள்ளது.

[இலங்கைத் தமிழரசுக் கட்சிக் கிளைகள் - அம்பாறை மாவட்டம்]

இக்கோப்பு அம்பாறை மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சிக் கிளைகள் தொடர்பான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது. கட்சிக் கிளை அலுவலகங்களின் பெயர்கள், கிளை மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களின் பெயர்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

[கிளிநொச்சி மற்றும் அக்கராயன்குளத்தை வதிவிடமாகக் கொண்ட இந்திய வம்சாவளியினர்]

இக்கோப்பு கிளிநொச்சி மற்றும் அக்கராயன்குளத்தை வதிவிடமாகக் கொண்ட இந்திய வம்சாவளியினரின் நிலைமை தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் (யாழ்ப்பாண மாவட்டம்) எஸ். தொண்டமான் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமொன்றினைக் கொண்டுள்ளது.

[1964 சூறாவளி]

இக்கோப்பு 1964இன் சூறாவளி, புயல் நிவாரண முயற்சிகள், சூறாவளி காரணமாக மீன்பிடித்துறை எதிர்கொண்ட சேதங்கள் ஆகியன தொடர்பான கடிதங்கள், தட்டச்சிடப்பட்ட குறிப்புகள், தீர்மானங்கள், குறிப்பாணைகளைக் கொண்டுள்ளது. பிரதானமாக, எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்கள் பல்வேறு அரச அதிகாரிகளுக்கு எழுதிய கடிதங்கள், ஆவணங்களை உள்ளடக்கியுள்ளது.

[ஆயுர்வேதக் கல்லூரி - மருத்துவர், என். இரத்னசபாபதி]

இக்கோப்பு ஆயுர்வேத கல்லூரி சித்த விரிவுரையாளர் பதவிக்கு மருத்துவர், என். இரத்னசபாபதி அவர்கள் சமர்பித்த விண்ணப்பம் தொடர்பான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது.

[நெற்காணிச் சட்டத்தின் குறைபாடுகள்]

இக்கோப்பு யாழ்ப்பாண விவசாயிகள், நெற்காணிகளை ஆதாரமாகக் கொண்டு நெற்காணிச் சட்டத்தின் குறைபாடுகள்/ வரையறைகள் குறித்து என். செல்வவிநாயகமூர்த்தி அவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணமொன்றைக் கொண்டுள்ளது.

[கைத்தறி தொழிற்துறை]

இக்கோப்பு நெசவுத் தொழிற்துறை மற்றும் புதிய அரசாங்கத்தின் நாடு முழுதிலும் 1,000 கைத்தறி நிலையங்கள் அமைக்கும் திட்டம், வடக்கில் புதிய கைத்தறி நிலையங்கள் அமைப்பது தொடர்பில் ஆர்வம் தெரிவித்து இரு உள்ளூர் நெசவுத் தொழிற்சங்களால் எழுதப்பட்ட நான்கு கடிதங்களைக் கொண்டுள்ளது.

[1965 தேர்தலுக்கு பின்னைய கடிதத் தொடர்பு]

இக்கோப்பு 1965 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து இடம்பெற்ற டட்லி சேனாநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தைகள், அளிக்கப்பட்ட அமைச்சர் பதவி குறித்த உரையாடல்கள், புதிய அரசாங்கத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வகிபாகம் போன்ற விடயங்கள் தொடர்பான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது.

[தமிழ் மாணவ ஆசிரியர்கள்]

இக்கோப்பு தமிழ் மாணவ ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை நுழைவுத் தேர்வு ஆகியன தொடர்பான ஆவணங்களைக் கொண்டுள்ளது. தமிழ் மாணவ ஆசிரியர்களின் பதவி உயர்வு, இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகளை விவரிக்கும் தட்டச்சிடப்பட்ட ஆவணமொன்றினையும் ஆறு கடிதங்களையும் கொண்டுள்ளது.

[அனைத்து கட்சிகள் மாநாடு]

இக்கோப்பு தேசியப் பிரச்சினைகளான மொழி, குடியுரிமை, குடியேற்றம் ஆகிய விடயங்களை அனைத்து கட்சிகள் மாநாடு மூலம் தீர்ப்பது தொடர்பாக செல்வநாயகம் அவர்களுக்கும் ஏ. அசீஸ் (ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்) அவர்களுக்குமிடையில் இடம்பெற்ற கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது.

[உறுப்பினர் வெளியேற்றம் தொடர்பான கட்சி கடிதத் தொடர்பு]

இக்கோப்பு இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுக் குழுவிலிருந்து இரு உறுப்பினர்களை (சி. வன்னியசிங்கம், ஆர். டபிள்யூ, வி. அரியநாயகம்) வெளியேற்றுவது தொடர்பான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது.

[உள்ளூராட்சித் தேர்தல் கட்சி சின்னங்கள்]

இக்கோப்பு உள்ளூராட்சித் தேர்தலில் கட்சிச் சின்னங்கள் குறித்த கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது. மேலும், இதனுடன் தொடர்புடைய அரச வர்த்தமானி அறிக்கையின் மூலப் பிரதியொன்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மூதவைத் தேர்தல், தமிழரசுக் கட்சியின் மூதவை உறுப்பினர்

இக்கோப்பு 1965 மூதவை (செனட்டர்) தேர்தல் தொடர்பான ஆவணங்களைக் கொண்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் மூதவை உறுப்பினர் பதவி தொடர்பில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வழங்கிய பரிந்துரைகளை உள்ளடக்கிய கடிதங்கள், தந்திகள், தட்டச்சிடப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

[ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாறு தொடர்பான நூல் கண்காட்சி]

இக்கோப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 1966 மாநாட்டில் காட்சிப்படுத்தும் நோக்குடன் முன்மொழியப்பட்ட ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாறு (ஆர். கனகரத்தினம், பவளராணி கனகரத்தினம்) தொடர்பான நூல் கண்காட்சி குறித்த இரு கடிதங்களைக் கொண்டுள்ளது.

[இலங்கை துறைமுக தொழிலாளர் கழகம்]

இக்கோப்பு திட்ட வளராக்கம் மற்றும் தமது அமைப்பின் கீழ் மேலதிகத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டுவதற்கு நிதியுதவி கோரி இலங்கைத் துறைமுகத் தொழிலாளர் கழகத்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எழுதப்பட்ட இரு கடிதங்களைக் கொண்டுள்ளது.

[இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் பரப்புரைச் செலவினங்கள்]

இக்கோப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் பரப்புரைச் செலவினங்கள் மற்றும் கொடுப்பனவுப் பற்றுச்சீட்டுகள் தொடர்பான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது.

கிழக்கிலங்கை சீவல் தொழிலாளர் சங்கம்

இக்கோப்பு இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சீவல் தொழிலாளர் சமூகம் குறித்த கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது. கிழக்கிலுள்ள சீவல் தொழிலாளர் சமூகத்தின் புவியியல் மற்றும் சமூகப் பின்புலத்தையும் தற்போது அச்சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் விவரிக்கும் ஏழு பக்கங்கள் நீளமான ஒரு மனுவை உள்ளடக்கியுள்ளது.

[மருந்தகங்களும் மருந்து விநியோகத் துணை நிலையங்களும்]

இக்கோப்பு மருந்தகங்கள், மருந்தாளுநர் ஆட்சேர்ப்புக்கான தேர்வு, சுகாதார திணைக்களத்தின் மருத்துவ நிறுவனங்களுக்கான மருந்து விநியோகத்தினைப் பன்முகப்படுத்தி பகிர்ந்தாளும் முன்மொழிவு, வடகிழக்கில் மருந்து விநியோகத் துணை நிலையங்களின் பற்றாக்குறை ஆகியன குறித்த கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது.

[தமிழ் விவசாயத் தகுதிச் சான்றிதழ் கொண்டோருக்கான ஆசிரிய நியமனங்கள்]

இக்கோப்பு குண்டசாலை விவசாயக் கல்லூரியைச் சேர்ந்த தமிழ் விவசாயத் தகுதிச் சான்றிதழ் கொண்டோருக்கான ஆசிரிய நியமனங்கள் குறித்த இரு கடிதங்களைக் கொண்டுள்ளது.

[யாழ் மக்கள் தொழிலாளர் சங்கம்]

இக்கோப்பு யாழ் மக்கள் தொழிலாளர் சங்கம் எனப்படும் புதிய தொழிலாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் பதிவீடு தொடர்பான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்துத் துறைமுகத் தொழிலாளர்களின் பணி குறித்தும் நடைமுறையிலுள்ள கூட்டுறவு ஒன்றியங்கள்/ தொழிற்சங்கங்கள், கப்பல் சுமையிறக்கும் தொழிற்துறையில் அவற்றின் வகிபாகம், புதிய யாழ் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் சட்டரீதியான செல்லுபடியாகாததன்மை போன்றன தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவுத் துறைமுகச் சேவை சமாசத்தினால் செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமொன்றினையும் உள்ளடக்கியுள்ளது.

[இலங்கை அரச சேவையிலுள்ள தமிழ் ஊழியர்கள்]

இக்கோப்பு இலங்கை அரச சேவையிலுள்ள தமிழர் தொடர்பான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது. தட்டெழுத்தர் தேர்வு, புதிதாகச் சேர்ந்த தமிழ் ஊழியர்களுக்கு எழுத்தர் சேவைப் பயிற்சி, இலங்கை இராணுவத்தில் பணிபுரிந்த ஒரு தமிழ்ப் படைத்தலைவரின் சேவை ஓய்வூதியம் போன்ற விடயங்கள் தொடர்பான கடிதங்களை உள்ளடக்கியுள்ளது.

[இலங்கை கூட்டுறவு கல்லூரி, பொல்கொல்லை]

இக்கோப்பு பொல்கொல்லையிலுள்ள இலங்கை கூட்டுறவு கல்லூரியின் தமிழ்க் கூட்டுறவு ஆய்வாளர் பயிற்சி வகுப்பு கைவிடப்பட்டமை தொடர்பான மூன்று கடிதங்களைக் கொண்டுள்ளது.

[கந்தசாமி, முத்துசாமி வி. - சிவஞானசுந்தரம் கடிதம்]

இக்கோப்பு வி. முத்துசாமி கந்தசாமி அவர்களால் சிவஞானசுந்தரம் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமொன்றைக் கொண்டுள்ளது.

[பெருந்தோட்டப் பாடசாலைகளும் ஆசிரியர்களும்]

இக்கோப்பு தமிழ்மொழி மூலப் பெருந்தோட்டப் பாடசாலைகள், அப்பாடசாலை ஆசிரியர்கள் தொடர்பான ஆவணங்களைக் கொண்டுள்ளது. பெருந்தோட்டப் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்களின் நியமனம் தொடர்பாக சுதந்திரனில் வெளிவந்த பொதுவிளிப்பைத் [க.பொ.த. சாதாரணதரச் சித்தியடைந்தோர் கல்வி கற்பித்தலில் ஆர்வமிருப்பின் கடிதம் மூலம் தொடர்பு கொள்ளக்கோரி] தொடர்ந்து செல்வநாயகம் அவர்களுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு கடிதங்களைக் கொண்டுள்ளது.

[கல்முனை தேர்தல் தொகுதி]

இக்கோப்பு கல்முனை தேர்தல் தொகுதி தொடர்பான ஆவணங்களைக் கொண்டுள்ளது. கல்முனை தமிழரசுக் கட்சிக் கிளைச் செயற்பாடுகள், தேர்தல் தொகுதியில் புதுக் கட்சிக் கிளைகள் உருவாக்கம், வேட்பாளர் நியமனங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய கடிதங்கள், தந்திகள், குறிப்பாணைகளைக் கொண்டுள்ளது. மேலும், சூறாவளி தொடர்பாக செல்வநாயகம் அவர்களால் எழுதப்பட்ட கடிதமொன்றினையும் கொண்டுள்ளது.

[தமிழ் அரசாங்க ஊழியர்களும் ஓய்வூதியமும்]

இக்கோப்பு புதிய சிங்கள மொழித் தேர்ச்சிக் கோரிக்கை தொடர்பாகவும் தமது தொழில் மற்றும் ஓய்வூதிய விடயங்களில் அதன் தாக்கங்கள் தொடர்பாகவும் பல்வேறு அரச திணைக்களங்களிலும் பணிபுரியும் தமிழ் அரச ஊழியர்களால் எழுதப்பட்ட கடிதங்களைக் கொண்டுள்ளது.

[தமிழர் உரிமைகள் தொடர்பான பரிந்துரைகளும் தீர்மானங்களும்]

இக்கோப்பு தமிழ்மொழிப் பிரச்சினையும் தமிழ் பேசும் அரச பணியாளர்களும், பாராளுமன்றக் கூட்டத் தொடர் முடிவு, தமிழர் உரிமைகள் தொடர்பாக அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் போன்றன குறித்த கடிதங்கள், தபாலட்டைகள், பிரதமருக்கு அனுப்பப்பட்ட இரு தீர்மானங்களின் பிரதிகள் ஆகிய ஆவணங்களைக் கொண்டுள்ளது. மேலும், இலங்கையில் இனங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டினை அடைவதற்கான பத்து பரிந்துரைகளைக் கொண்ட தட்டச்சிடப்பட்ட ஆவணமொன்றினையும் கொண்டுள்ளது.

[தேசிய கல்வி முறைமை தொடர்பான குறிப்பாணைகள்]

இக்கோப்பு புதிய கல்வி சட்டமுன்வரைவு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கல்வி முறைமை முன்மொழிவு தொடர்பான இரு குறிப்பாணைகளையும் வெள்ளைப் பத்திரிகை, அவற்றுடன் தொடர்புடைய ஏனைய அறிக்கைகள், முன்வைப்புரைகளையும் கொண்டுள்ளது. அகில இலங்கை தமிழ் ஆசிரியர்கள் சங்கத்தால் தயாரிக்கப்பட்ட குறிப்பாணையொன்றினையும் [10 பக்கங்கள்] வடகிழக்கு மாகாணங்களுக்கான கல்விசார் தேவைகள் தொடர்பாக வி. நவரத்தினம் அவர்களால் தயாரிக்கப்பட்ட குறிப்பாணையொன்றினையும் [7 பக்கங்கள்] கொண்டுள்ளது. மேலும், வி. நவரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட கடிதமொன்றினையும் பல்கலைக்கழக ஒதுக்கீடு தொடர்பான தட்டச்சிடப்பட்ட ஆவணமொன்றினையும் கொண்டுள்ளது.

[கோணேசர் கோவில் - திருக்கோணமலை]

இக்கோப்பு திருக்கோணமலை கோணேஸ்வரர் கோவில் மற்றும் பிரெட்ரிக் கோட்டை பிரதேசத்தை இந்துக்களுக்கான புனிதப் பிரதேசமாகப் பிரகடனம் செய்தல் தொடர்பான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது. வி. என். தம்பிராசா, எஸ். ஜே. வி. செல்வநாயகம், கே. எஸ். சித்திரவேலு, கே. முத்துக்குமாரசாமி ஆகியோரால் எழுதப்பட்ட கடிதங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பிரதேசங்களிலுள்ள தொழிநுட்பக் கல்லூரிகள் தொடர்பான கடிதமொன்றினையும் கொண்டுள்ளது.

[இந்து சமய புனித வலையங்களும் சமய விடுமுறை நாட்களும்]

இக்கோப்பு கீரிமலையையும் நல்லூரையும் சமய புனித வலையங்களாகப் பிரகடனப்படுத்தல் மற்றும் ஒன்பது பிரதான இந்து விடுமுறை தினங்களை பொது விடுமுறை தினங்களாக்கக் கோரி விவேகானந்தா சபையால் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பான கடிதங்கள், அச்சிடப்பட்ட பிரசுரங்கள், தட்டச்சிடப்பட்ட தீர்மானங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

[இலங்கைத் தமிழரசுக் கட்சி மன்னார் கிளைகள்/ மன்னார் தேர்தல் தொகுதி]

இக்கோப்பு மன்னார் தேர்தல் தொகுதி மற்றும் மன்னார் தமிழரசுக் கட்சிக் கிளைகள், அவற்றின் உருவாக்கம், பரப்புரைச் செயற்பாடுகள், மன்னார் அலுவலகம் நிறுவுதல் ஆகியவற்றுடன் தொடர்பான கடிதங்கள், தபாலட்டைகளையும் மற்றும் கிளை அலுவலகர்கள், கிளை உறுப்பினர்கள் தொடர்பான பட்டியல்களையும் கொண்டுள்ளது.

[சிங்கள மொழித் தேர்ச்சியும் தமிழ் அரச ஊழியர்களும்]

இக்கோப்பு சிங்கள மொழித் தேர்ச்சி விலக்கு தொடர்பில் எஸ். சி. சதானந்தன் அவர்களால் பொது நிர்வாக இளநிலை அமைச்சருக்கு எழுதப்பட்ட கடிதமொன்றையும் அடையாளம் காண இயலாத இரண்டாவது கடிதமொன்றையும் கொண்டுள்ளது.

[சிங்களம் மட்டும் சட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற தமிழ் அரச ஊழியர்கள்]

இக்கோப்பு சிங்களம் மட்டும் சட்டத்தின் கீழ் கட்டாய ஓய்வு பெற்ற அல்லது வேலை இழந்த தமிழ் அரச ஊழியர்கள் தொடர்பாக எம். மகாலிங்கம், கே. இளையதம்பி, கே. பத்மநாதன் ஆகியோரால் எழுதப்பட்ட ஆறு கடிதங்களைக் கொண்டுள்ளது.

[இலங்கைத் தமிழரசுக் கட்சி தலவாக்கலை கிளை]

இக்கோப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலவாக்கலை கிளை உருவாக்கம், பொதுச் செயற்பாடுகள் தொடர்பான ஆவணங்களைக் கொண்டுள்ளது. மேலும், கிளைக் கூட்டங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான இரு கடிதங்களையும் கொண்டுள்ளது.

[தமிழ்ப் பாடசாலைகளும் கல்லூரிகளும்]

இக்கோப்பு தமிழ்ப் பாடசாலைகள், கல்லூரிகள் தொடர்பான ஆவணங்களைக் கொண்டுள்ளது. தொழிநுட்பக் கல்லூரிகளும் தமிழ் மாணவர்களும் மற்றும் யாழ்ப்பாணத் தொழிநுட்பக் கல்லூரி தரமுயர்வு தொடர்பான தட்டச்சிடப்பட்ட ஆவணமொன்றினையும் உள்ளடக்கியுள்ளது. மேலும், திருநெல்வேலி சைவ ஆசிரிய பயிற்சிக் கல்லூரி தொடர்பான கடிதமொன்றினையும் எஸ். ஜே. வி. செல்வநாயகம், கே. எஸ். சுவர்ணராஜ் ஆகியோரால் எழுதப்பட்ட கடிதங்களையும் கொண்டுள்ளது.

[இறக்குமதி கொள்கை]

இக்கோப்பு அரசாங்கத்தின் இறக்குமதி கொள்கை கட்டுப்பாடுகள் தொடர்பான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது. எம். ஜே. நல்லையா, ரெபெக்கா நல்லையா ஆகியோரால் தமது சவப்பெட்டி வணிகத்திற்காக ஒண்பட்டுத்துகில் அடைப்பு சவவூர்தி வண்டி இறக்குமதி தொடர்பாக எழுதப்பட்ட கடிதங்களைக் கொண்டுள்ளது.

[தோட்டத் தொழிலாளர் வேலைநிறுத்தம்]

இக்கோப்பு பெருந்தோட்டத் தொழிலாளர் வேலைநிறுத்தம் தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் கழகத்தின் நிர்வாகக் குழுவினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தையும் அதனுடன் தொடர்புடைய கடிதமொன்றையும் கொண்டுள்ளது.

Results 1 to 50 of 3500