Showing 3500 results

Archival description
தமிழ்
அச்சு முன்காட்சி View:

சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம் 

  • UTSC 014
  • Fonds
  • n.d., 1921, 1929-1930, 1933-1937, 1939-1940, 1944-1988

விளங்கியமையையும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாளாந்த நடவடிக்கைகளையும் இச்சேகரம் பிரதிபலிக்கிறது.

இச்சேகரம் இலங்கையில் 1950 இலிருந்து 1970 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற முக்கியமான அரசியல் நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதோடு இலங்கைத் தமிழர்கள் எதிர்கொண்ட போராட்டங்களுக்கு சாட்சியமாகவும் விளங்குகிறது.

இச்சேகரம் செல்வநாயகம் அவர்களின் குடும்பம், பின்புலம் தொடர்பான ஆவணங்களையும் அவரது துணைவியார் எமிலி கிரேஸ் செல்வநாயகம் சேகரித்த நினைவஞ்சலி ஆவணங்களையும் கொண்டுள்ளது. மூன்று பிரதான வரிசைகளாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இச்சேகரம் 1933-1937, 1939-1940, 1944-1988 ஆகிய காலப்பகுதிகளுக்கான ஆவணங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் பெருளவிலான ஆவணங்கள் 1960, 1970 காலப்பகுதியைச் சேர்ந்தவை ஆகும்.

தனிப்பட்ட ஆவணங்கள் கடிதத் தொடர்பு, தனிப்பட்ட பொருட்கள், நிதி மற்றும் தேயிலைத் தோட்டத்துடன் தொடர்புடைய ஆவணங்கள், ஏனைய ஆவணங்களை உள்ளடக்கியுள்ளன. தொழில்சார் ஆவணங்கள் அலுவலகக் கோப்புகள், கட்சி ஆவணங்கள், கடிதத் தொடர்பு, ஏனைய ஆவணங்களை உள்ளடக்கியுள்ளன. நினைவஞ்சலி ஆவணங்கள் சுவரொட்டிகள், செய்தித்தாள் துணுக்குகள், நினைவஞ்சலிக் குறிப்பேடு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. இச்சேகரம் பின்வருமாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது:

  1. தனிப்பட்ட ஆவணங்கள்
    1.1. எஸ். ஜே. வி. செல்வநாயகம் தனிப்பட்ட கடிதத் தொடர்பு
    1.2. எஸ். ஜே. வி. மற்றும் எமிலி கிரேஸ் செல்வநாயகம் கடிதத் தொடர்பு
    1.3. எமிலி கிரேஸ் செல்வநாயகம் கடிதத் தொடர்பு
    1.4. தனிப்பட்ட பொருட்கள்/உடைமைகள்
    1.5. பல்வகை கடிதத் தொடர்பு
    1.6. பல்வகை குடும்ப ஆவணங்கள்
    1.7. நிதி ஆவணங்கள்
  2. தொழில்சார் ஆவணங்கள்
    2.1. தொழில்சார் கோப்புகள்
    2.2. தொழில்சார் கடிதத் தொடர்பு
    2.3. ஆவணங்கள்
    2.4. அச்சிடப்பட்ட ஆவணங்கள்
    2.5. சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட்/ சுதந்திரன்
    2.6. இலங்கை தமிழரசுக் கட்சி கோப்புகள்
  3. நினைவஞ்சலி ஆவணங்கள்

Chelvanayakam, Samuel James Velupillai

தனிப்பட்ட ஆவணங்கள்

இவ்வரிசை எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களினதும் அவரது துணைவியாரான எமிலி கிரேஸ் செல்வநாயகம் அவர்களினதும் தனிப்பட்ட ஆவணங்களைக் கொண்டுள்ளது. மேலும், 16 அல்பிரட் ஹவுஸ் கார்டின்ஸில் வசித்த அல்லது பணிபுரிந்த ஏனைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் தனிப்பட்ட ஆவணங்களையும் கொண்டுள்ளது.

இவ்வரிசை ஏழு உபவரிசைகளை உள்ளடக்கியுள்ளது:

1.1 எஸ். ஜே. வி. செல்வநாயகம் தனிப்பட்ட கடிதத் தொடர்பு
1.2 எஸ். ஜே. வி. மற்றும் எமிலி கிரேஸ் செல்வநாயகம் கடிதத் தொடர்பு
1.3 எமிலி கிரேஸ் செல்வநாயகம் கடிதத் தொடர்ப
1.4 தனிப்பட்ட பொருட்கள்
1.5 பல்வகை கடிதத் தொடர்பு
1.6 பல்வகை குடும்ப ஆவணங்கள்
1.7 நிதி ஆவணங்கள்

எஸ். ஜே. வி. செல்வநாயகம் தனிப்பட்ட கடிதத் தொடர்பு

Subseries contains Chelvanayakam’s correspondence that is personal in nature, including correspondence with family. Letters are mostly addressed to Chelvanayakam but letters from Chelvanayakam exist where he made copies. Letters are arranged alphabetically (in English) by the correspondent’s name. 

செல்வநாயகம், எமிலி கிரேஸ் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

இக்கோப்பு ஏழு கடிதங்களைக் கொண்டுள்ளது. சில வாழ்த்து அட்டைகளும், ஒரு தந்தியும் ஒரு கடிதத்தின் துண்டும் (எமிலி கிரேஸால் எழுதப்பட்டதாக இருக்க வேண்டும்) காணப்படுகின்றன.

ஐக்கிய இராச்சியத் தூதரக உயர் ஆணையர் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

தனதும் தனது துணைவரினதும் மற்றும் சகோதரர், ஈ. வி. பொன்னுத்துரையினதும் பிரஜாவுரிமைத் துறப்பு தொடர்பாக செல்வநாயத்தால் எழுதப்பட்ட இரு கடிதங்களைக் கொண்டுள்ளது.

சுன்னாகம் காவல்துறை - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

திருமதி. கனகசுந்தரத்திற்கான மனு ஒன்று தொடர்பாக செல்வநாயகம் எழுதிய கடிதம்.

டி சரம், டி. எல். & எப். - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

ஒரு குழந்தை குறித்த நீதிமன்ற ஆணை தொடர்பாக செல்வநாயகம் எழுதிய கடிதம்.

மனோகரன், ஏ. செல்வநாயகம் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

செல்வநாயகம் - மனோகரனுக்கிடையிலான கடிதங்களைக் கொண்டுள்ளது.

அரச மற்றும் பாரளுமன்ற அமைச்சு செயலாளர் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

தனது மகனின் கடவுச்சீட்டுப் பதிவு தொடர்பான செல்வநாயத்தின் உசாவலுக்கு அமைச்சு எழுதிய பதில் கடிதம்.

பண்டாரநாயக்கா, எப். ஆர். டி. - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

இரங்கற் கடிதத்திற்கான மறுமொழியும் செல்வநாயகத்தின் சிகிச்சையிலிருந்து விரைவில் குணமடைய வாழ்த்தும் தெரிவிக்கும் கடிதம்.

[தபாலதிபர்] - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

செல்வநாயகம் கொழும்புத் தபாலதிபருக்கு எழுதிய கடிதம்.

பண்டாரநாயக்கா, சிறிமாவோ - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

தனது மகனின் குடிவரவு தொடர்பாக திருமதி. பண்டாரநாயக்காவிற்கு செல்வநாயகம் எழுதிய கடிதம்.

ரவீந்திரன், ஜே. செல்வநாயகம் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

இரவீந்திரனுக்கும் செல்வநாயத்திற்கும் இடையிலான கடிதத் தொடர்பினையும் செல்வநாயகத்தால் எழுதப்பட்ட ஆனால் அனுப்பப்படாத வரைவுக் கடிதங்களையும் கொண்டுள்ளது.

முடிவுகள் 1 இலிருந்து 50 இன் 3500 வரை