Showing 3500 results

Archival description
Tamil
Print preview View:

இ. த. அ. கட்சியின் நிர்வாகச் செயலாளருக்கு கொக்குவில், தமிழன் பாசறையைச் சார்ந்த ஒருவர் எழுதியக் தபால் அட்டை

இந்த கடிதத்தில், கொக்குவில், தமிழன் பாசறையைச் சார்ந்த ஒருவர் இ. த. அ. கட்சியின் நிர்வாக செயலாளர் திரு. க.சிவானந்தசுந்தரமிடம் பல கேள்விகைக் கேட்டுள்ளார். அடுத்த பொதுக்குழு கூட்டம் 24.02.1963 அன்று நடைபெறுமா என்றும், அப்படியானால், அதற்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? ஏன் இன்னும் உறுப்பினர்களிடமிருந்து மாதாந்த சந்தாப் பணம் அறவிடப்படவில்லை என சில கேள்விகளைக் கேட்டு எழுதியுள்ளார்.

இ,த,அ. கட்சி தலைவர் அவர்கள் திரு. ஆர். எம். ராமய்யா அவர்களின் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவியை உறுதிப்படுத்த எழுதிய வரைவுக் கடிதம்

இக்கடிதத்தில், கட்சியின் அமைப்பு விதி 8 (அ) (4) இன் படி திரு. ஆர். எம். ராமய்யா அவர்களை மத்திய செயற்குழு அங்கத்தவராக கட்சித் தலைவர் நியமித்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கட்சி அமைப்பு விதி (7) என் படி இவர் பொதுக்காரியசபை உறுப்பினரும் ஆவார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

திரு. க. அ. ரோச்சடீவாஸ்

இக்கடிதத்தில், மூதூரின் ஒன்பதாம் வட்டாரத்தைச் சார்ந்த திரு. க. அ. ரோச்சடீவாஸ் அவர்கள் தன்னால் வவுனியாவில் நடக்கவிருக்கும் பொதுக்காரியக் கூட்டத்திற்கு வரமுடியாதுள்ளது எனவும் கட்சி எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் அவர் ஒத்துழைப்பு வழங்குவார் எனவும் குறிப்பிட்டு கட்சிப் பொதுச் செயலாளருக்கு எழுதியுள்ளார்.

எட்டாவது மத்திய செயற்குழு கூட்டம் நிகழ்ச்சி நிரல், மன்னார்

இந்நிகழ்ச்சி நிரலில் எட்டாவது மத்திய செயற்குழுக் கூட்டம் 18-19 திகதி, மே மாதம் 1963 அன்று மன்னார் பாரளுமன்ற் உறுப்பினர் திரு. வி. அ. அழகக்கோன் அவர்களது இல்லத்தில் இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பன்னிரண்டு விடயங்கள் பற்றி கலந்துரையாடப் பட்டியலிடப்பட்டுள்ளன. இத்துடன் முக்கிய குறிப்பாக மன்னார், திருகோணமலை, மூதூர் தொகுதிகளில் நடக்கவிருந்தத் தமிழியக்கப் பிரசாரக் கூட்டங்கள் பின்வரும் திகதிகளுக்கு மாற்றப்பட்டன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னார் - 17-19. 05.1963; திருகோணமலை - 25. 05.1963; மூதூர் - 26-27.05.1963. மேலும், இந்நிகழ்ச்சி நிரலில் நிர்வாகச் செயலாளர் திரு. க. சிவானந்தசுந்தரம் மற்றும் பொதுச் செயலாளர் திரு. இ.மு.வி. நாகநாதன் இருவராலும் கையொப்பமிடப்பட்டு கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை தொகுதி - பெயர் பட்டியல்

பக்கம் (ஆ), பக்கம் (அ)வின் பின்புறம்.திகதியிடப்பட்ட சு. ம. மாணிக்கராசா (திருக்கோணமலை நெசவு நிலையத் தலைவர்) - திருக்கோணமலை மக்கள் அறிவித்தல் பக்கம் (ஆ)வில் இணைக்கப்பட்டுள்ளது.

சி. இராஜூ[?] - இ. த. அ. க. தலைவர் கடிதம்

பக்கம் (ஆ), பக்கம் (அ)வின் பின்புறம். சி. சே. மாட்டின் அனுப்பிய நன்றியறிவித்தல் பக்கம் (ஆ)வில் இணைக்கப்பட்டுள்ளது.

Results 1 to 50 of 3500