Showing 3500 results

Archival description
தமிழ்
அச்சு முன்காட்சி View:

[மே தினம்/ உலக உழைப்பாளர் நாள்]

இக்கோப்பு மேதினக் கொண்டாட்டங்கள் தொடர்பான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது. எஸ். ஜே. வி. செல்வநாயகம், வி. தங்கவேல், ஈ. நாகேந்திரம், ஈ. பத்மநாதன் ஆகியோரால் எழுதப்பட்ட 5 கடிதங்களைக் கொண்டுள்ளது.

[தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் வணிகக் கல்வி]

இக்கோப்பு தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் வணிகக் கல்வி தொடர்பான ஆவணங்களைக் கொண்டுள்ளது. தமிழ் பேசும் வணிக ஆசிரியர்களின் நியமனம், பயிற்சி, தேர்வு தொடர்பில் அரசாங்கத்தின் பாகுபாட்டு நடைமுறைகள் தொடர்பான கடிதங்கள், கையால் எழுதப்பட்ட குறிப்புகள், அரச வர்த்தமானிப் பிரதி ஆகிய ஆவணங்களைக் கொண்டுள்ளது.

[மொழிப் பாரபட்சம் - அஞ்சல் சேவைகள்]

இக்கோப்பு தமிழில் அஞ்சல் சேவைகள் தொடர்பான ஆவணங்களையும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள அஞ்சல் திணைக்களங்களில் தமிழில் சேவை வழங்கப்படாமை குறித்த ஆவணங்களையும் கொண்டுள்ளது. கடிதங்கள், தந்திகள், அடையாள அட்டைப் பிரதி, பண அஞ்சல் படிவங்கள் போன்ற ஆவணங்களைக் கொண்டுள்ளது. மேலும், எகெலியகொடைப் பிரதேசத்தில் வதியும் தமிழரால் (133 பெயர்கள், கையெழுத்துக்கள் முகவரிகளுடன்) தமது நகரின் அஞ்சல் சேவைகளில் இடம்பெறும் மொழிப் பாரபட்சத்தினை விவரித்து எழுதப்பட்ட கடிதமொன்றையும் கொண்டுள்ளது.

முடிவுகள் 1 இலிருந்து 50 இன் 3500 வரை