Showing 109211 results

Archival description
File
அச்சு முன்காட்சி View:

? பொன்னுத்துரை, ஏர்னஸ்ட் வேலுப்பிள்ளை கடிதம்

இக்கோப்பு திருமணக்கோரிக்கை ஒன்று தொடர்பில் பேபி என்ற கையெழுத்துடனான பெண்ணொருவர் பொன்னுத்துரைக்கு (செல்வநாயகம் அவர்களின் சகோதரர்) எழுதிய கடிதமொன்றைக் கொண்டுள்ளது.

[12 நினைவஞ்சலி சுவரொட்டிகள்]

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் அச்சிடப்பட்ட செல்வநாயகத்தின் படங்கள் கொண்ட நினைவஞ்சலிச் சுவரொட்டிகள், 8.5x13" அளவைக் கொண்டவை.

[15 நினைவஞ்சலி சுவரொட்டிகள்]

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் அச்சிடப்பட்ட செல்வநாயகத்தின் படங்கள், எழுத்து, கவிதைகளைக் கொண்ட நினைவஞ்சலிச் சுவரொட்டிகள். 10x18" க்கும் மேலான பல்வகை வடிவளவைக் கொண்டவை.

[18 நினைவஞ்சலி சுவரொட்டிகள்]

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் அச்சிடப்பட்ட செல்வநாயகத்தின் படங்கள் கொண்ட நினைவஞ்சலிச் சுவரொட்டிகள், 8.5x13" அளவைக் கொண்டவை.

[1964 சூறாவளி]

இக்கோப்பு 1964இன் சூறாவளி, புயல் நிவாரண முயற்சிகள், சூறாவளி காரணமாக மீன்பிடித்துறை எதிர்கொண்ட சேதங்கள் ஆகியன தொடர்பான கடிதங்கள், தட்டச்சிடப்பட்ட குறிப்புகள், தீர்மானங்கள், குறிப்பாணைகளைக் கொண்டுள்ளது. பிரதானமாக, எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்கள் பல்வேறு அரச அதிகாரிகளுக்கு எழுதிய கடிதங்கள், ஆவணங்களை உள்ளடக்கியுள்ளது.

[1965 தேர்தலுக்கு பின்னைய கடிதத் தொடர்பு]

இக்கோப்பு 1965 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து இடம்பெற்ற டட்லி சேனாநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தைகள், அளிக்கப்பட்ட அமைச்சர் பதவி குறித்த உரையாடல்கள், புதிய அரசாங்கத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வகிபாகம் போன்ற விடயங்கள் தொடர்பான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது.

1975 தேர்தல் வெற்றி தொடர்பாக எஸ். ஜே. வி. செல்வநாயகத்திற்கு அனுப்பப்பட்ட தந்திகள்

இக்கோப்பு செல்வநாயகம் அவர்களின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்து பல்வேறு தனிநபர்களாலும் அமைப்புகளாலும் செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட 21 தந்திகளைக் கொண்டுள்ளது.

[26 ஏப்ரல் 1977 க்கு முன்னரான செய்தித்தாள் துணுக்குகள்]

செல்வநாயகம் தொடர்பான 7 செய்தித்தாள் துணுக்குகளைக் கொண்டுள்ளது. எமிலி கிரேஸால் சேகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

[28 நினைவஞ்சலி சுவரொட்டிகள்]

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் அச்சிடப்பட்ட எழுத்து, கவிதைகளைக் கொண்ட நினைவஞ்சலிச் சுவரொட்டிகள். 8.5x13" அளவைக் கொண்டவை.

[May 1977 செய்தித்தாள் துணுக்குகள்]

செல்வநாயகம் தொடர்பான செய்தித்தாள் துணுக்குகளைக் கொண்டுள்ளது. எமிலி கிரேஸால் சேகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அச்சிடப்பட்ட ஆவணங்கள் - பல்வகைத் துணுக்குகள்

இக்கோப்பு அடையாளம் காண இயலாத பல்வகை ஆவணங்களின் துணுக்குகளைக் (5 பக்கங்கள்) கொண்டுள்ளது.

[அடையாளம் காணப்படாத கடிதத் தொடர்பு]

இக்கோப்பு செல்வநாயகம் அவர்களால் என். எம். பெரேரா [?], பாதுகாப்பு & வெளியுறவு அமைச்சுச் செயலாளர் மற்றும் அடையாளம் காணப்படாத ஏனையோருக்கு எழுதப்பட்ட வரைவுக் கடிதத் துணுக்குகளையும் (9 பக்கங்கள்) வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர் ஒருவருக்கான பதிலாள் நியமனம் தொடர்பான கையால் எழுதப்பட்ட கடிதப்பிரதி ஒன்றையும் கொண்டுள்ளது.

அடையாளம் காணப்படாத கடிதத் தொடர்பு

இக்கோப்பு செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட அநாமதேய மிரட்டல்/எச்சரிக்கை குறிப்புகளுடனான கடிதத் துணுக்கொன்றையும் தபாலட்டையொன்றையும் கொண்டுள்ளது.

அடையாளம் காணப்படாத கையெழுத்துக் குறிப்புகள்

இக்கோப்பு கையால் எழுதப்பட்ட 11 ஆவணங்களின் துணுக்குகளைக் கொண்டுள்ளது.

[அடையாளம் காணப்படாத தனிப்பட்ட கடிதங்கள்]

இக்கோப்பு மதி, கண்மணி (இப்பெயர்கள் உண்மையான பெயர்களா அல்லது செல்லப் பெயர்களா என்று தெரியவில்லை) என்னும் இருவருக்கிடையிலான 3 காதல் கடிதங்களைக் கொண்டுள்ளது.

[அடையாளம் காணப்படாத தனிப்பட்ட கடிதத் தொடர்பு - எ. கி. செல்வநாயகத்திற்கு அனுப்பப்பட்டவை]

இக்கோப்பு ஆறு கடிதங்களைக் கொண்டுள்ளது. தமிழில் எழுதப்பட்ட சங்கிலித் தொடர் முறைக் கடிதம் ஒன்றையும் உறவினர் பிள்ளையொருவரால் எழுதப்பட்ட கடிதமொன்றையும் அடையாளம் காண இயலாத கையொப்பங்கள் கொண்ட ஏனைய கடிதங்களையும் கொண்டுள்ளது.

[அடையாளம் காணப்படாத தனிப்பட்ட கடிதத் தொடர்பு எஸ். ஜே. வி. செல்வநாயகத்திற்கு அனுப்பப்பட்டவை]

தமிழில் எழுதப்பட்ட நான்கு கடிதங்களைக் கொண்டுள்ளது. இரண்டு கடிதங்கள் கசங்கியும் கிழிந்தும் காணப்படுகின்றன. மற்றும், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஐந்து குறிப்புகளும் கடிதங்களும் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, யாழ்ப்பாண விவசாய அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது, பாதியாகக் கிழிந்து காணப்படுகிறது.

அந்தனி எஸ். ஜே. - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

இக்கோப்பு எஸ். ஜே. அந்தனியால் செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமொன்றையும் செல்வநாயகம் அவர்களால் எஸ். கந்தசாமி என்னும் ஆசிரியரின் கீரிமலை நகுலேஸ்வரா கல்லூரியிலிருந்தான இடமாற்றம் தொடர்பாக கல்வி அதிகாரிக்கு எழுதப்பட்ட வரைவுக் கடிதமொன்றையும் கொண்டுள்ளது.

[அனைத்து கட்சிகள் மாநாடு]

இக்கோப்பு தேசியப் பிரச்சினைகளான மொழி, குடியுரிமை, குடியேற்றம் ஆகிய விடயங்களை அனைத்து கட்சிகள் மாநாடு மூலம் தீர்ப்பது தொடர்பாக செல்வநாயகம் அவர்களுக்கும் ஏ. அசீஸ் (ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்) அவர்களுக்குமிடையில் இடம்பெற்ற கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது.

அயல்நாட்டு நாணயப் பரிமாற்றக் கட்டுப்பாடு தொடர்பான வினாக்கள்

இக்கோப்பு வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான அயல்நாட்டு நாணயப் பரிமாற்றக் கட்டுப்பாடு தொடர்பான ஆவணங்களைக் கொண்டுள்ளது.

அரச மற்றும் பாரளுமன்ற அமைச்சு செயலாளர் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

தனது மகனின் கடவுச்சீட்டுப் பதிவு தொடர்பான செல்வநாயத்தின் உசாவலுக்கு அமைச்சு எழுதிய பதில் கடிதம்.

[அரசாங்க மின்சாரத் திணைக்களம்]

இக்கோப்பு அஞ்சல் உறையொன்றினையும் அரச மின்சாரத் திணைக்கள ஊழியர்களின் [?] பெயர்கள், ஊதிய விபரங்களைக் கொண்ட பட்டியலொன்றினையும் (8 பக்கங்கள்) கொண்டுள்ளது.

அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக எஸ். ஜே. வி. செல்வநாயகத்திற்கு அனுப்பப்பட்ட கேள்விகளும் குறிப்புகளும்

இக்கோப்பு இலங்கைத் தமிழர் வரலாறு, புவியியல், யாழ்ப்பாணத் தமிழர்கள் மலையகத் தமிழர்களைச் சுரண்டல், ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியப் பிரதமரின் வகிபாகம், இலங்கைத் தமிழர் போராட்டத்தின் வர்க்கப் பரிமாணம், இலங்கை முஸ்லிம்களின் சமய தேசிய உருவாக்கம் ஆகிய விடயங்கள் தொடர்பாக செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதக்கூடிய 6 கையால் எழுதப்பட்ட வினாக்கள்/ குறிப்புகளைக் கொண்டுள்ளது.

அவசரகால சத்தியாக்கிரகம் 1961

இக்கோப்பு 1961ஆம் ஆண்டு நடைபெற்ற சத்தியாக்கிரகம் தொடர்பான கையெழுத்துக் கணக்கு அறிக்கைகள், கணக்காய்வு விண்ணப்பம் மற்றும் அறிக்கை, பல்வேறு சத்தியாக்கிரக செலவினங்கள், பண வழங்கல்களை விபரிக்கும் கடிதங்கள் ஆகிய ஆவணங்களைக் கொண்டுள்ளது. மேலும், தமிழரசுக் கட்சியின் சத்தியாக்கிரக இயக்கம், நாட்டின் அரசியல் நிலைமை தொடர்பாக செய்தித்தாட்களிலிருந்து வெட்டப்பட்ட மூன்று கட்டுரைகளையும் தட்டச்சிடப்பட்ட மூன்று கட்டுரைகளையும் கொண்டுள்ளது. மேலும், சத்தியாக்கிரக நினைவு தினத்தையொட்டி 1963ஆம் ஆண்டு கட்சி முன்மொழிந்த சந்திப்பு, பேரணி தொடர்பான அழைப்பிதழ்/ அறிக்கை ஒன்றினையும் இக்கோப்பு கொண்டுள்ளது.

ஆசியப் பிரச்சினைகள் - எல். ஐ. பிரெசித்தர் உரையின் சுருக்கம்

இக்கோப்பு ஆசியப் பிரச்சினைகள் என்னும் தலைப்பில் எல். ஐ. பிரெசித்தர் அவர்கள் அல்மா அட்டாவில் ஆற்றிய உரையின் சுருக்கத்தைக் கொண்டுள்ளது.

ஆசிரியர்களின் இடமாற்றங்கள்

இக்கோப்பு ஆசிரியர்களின் இடமாற்றம், இடமாற்றம் சார் கொள்கை தொடர்பாக எஸ். ஜே. வி. செல்வநாயகத்தாலும் ஏனையோராலும் எழுதப்பட்ட குறிப்பாணைகள், ஊடக அறிக்கைகள், தந்திகள், கடிதங்கள், தட்டச்சிடப்பட்ட குறிப்புகள் போன்ற ஆவணங்களைக் கொண்டுள்ளது.

[ஆயுர்வேதக் கல்லூரி - மருத்துவர், என். இரத்னசபாபதி]

இக்கோப்பு ஆயுர்வேத கல்லூரி சித்த விரிவுரையாளர் பதவிக்கு மருத்துவர், என். இரத்னசபாபதி அவர்கள் சமர்பித்த விண்ணப்பம் தொடர்பான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது.

இந்திய இராணுவத் தன்னார்வலர்கள் [இந்தியத் தொண்டர் படை]

இக்கோப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியால் முன்மொழியப்பட்ட இந்திய தொண்டர் படையில் சேரக் கோரி தமிழ் பேசும் இளைஞர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பின் பிரதியையும் நாடு முழுதுமிருந்து தமிழ் இளைஞர்களால் இக்கோரிக்கைக்கு பதிலாக அனுப்பப்பட்ட கடிதங்கள், தபாலட்டைகளையும் கொண்டுள்ளது. மேலும், எஸ். ஜே. வி. செல்வநாயகத்தால் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரான பி. கே. கபூருக்கு எழுதப்பட்ட இரு கடிதங்களையும் முன்மொழியப்பட்ட இந்திய தொண்டர் படையில் சேர விருப்பம் தெரிவித்தவர்களின் பட்டியல் இணைப்பொன்றையும் இக்கோப்பு கொண்டுள்ளது.

இந்தியாவின் இசை / எச். ஏ. பொப்லி [நூல்]

நூலட்டையின் உட்பகுதியில் செல்வநாயகத்தின் கையொப்பமும் 22 நவம்பர் 1921 என்ற கையெழுத்தும் காணப்படுகிறது.

[இந்து சமய புனித வலையங்களும் சமய விடுமுறை நாட்களும்]

இக்கோப்பு கீரிமலையையும் நல்லூரையும் சமய புனித வலையங்களாகப் பிரகடனப்படுத்தல் மற்றும் ஒன்பது பிரதான இந்து விடுமுறை தினங்களை பொது விடுமுறை தினங்களாக்கக் கோரி விவேகானந்தா சபையால் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பான கடிதங்கள், அச்சிடப்பட்ட பிரசுரங்கள், தட்டச்சிடப்பட்ட தீர்மானங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இயங்கு உறுப்பினர் படிவங்கள்

இக்கோப்பு நாடளாவிய இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களால் பூரணப்படுத்தப்பட்டு கையொப்பமிடப்பட்ட கட்சியின் இளஞ்சிவப்பு நிற இயங்கு உறுப்பினர் படிவங்களைக் கொண்டுள்ளது.

முடிவுகள் 1 இலிருந்து 50 இன் 109211 வரை