அச்சு முன்காட்சி மூடுக

Showing 151094 results

Archival description
அச்சு முன்காட்சி View:

அ. க. பொன்னம்பலம் - இ. மு. வி. நாகநாதன் (இ. த. அ. கட்சி பொதுச் செயலாளர்) கடிதம்

Contains note: K. Sivananthasuntharam noted saying no more action is needed. Also he initialled and dated 28/6/64

அ. சண்முகநாதன் - சா. ஜே. வே. செல்வநாயகம் கடிதம்

சத்தியாக்கிரக கணக்கு அறிக்கையும் 21-04-1961 திகதியிடப்பட்ட சத்தியாக்கிரக செலவினங்கள் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளன.

அச்சிடப்பட்ட ஆவணங்கள்

இவ் உபவரிசை சிறுவெளியீடுகள், சுவரொட்டிகள், செய்தித்தாள் துணுக்குகள், குறிப்பாணைகள், அறிக்கைகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

அச்சிடப்பட்ட ஆவணங்கள் - பல்வகைத் துணுக்குகள்

இக்கோப்பு அடையாளம் காண இயலாத பல்வகை ஆவணங்களின் துணுக்குகளைக் (5 பக்கங்கள்) கொண்டுள்ளது.

[அடையாளம் காணப்படாத கடிதத் தொடர்பு]

இக்கோப்பு செல்வநாயகம் அவர்களால் என். எம். பெரேரா [?], பாதுகாப்பு & வெளியுறவு அமைச்சுச் செயலாளர் மற்றும் அடையாளம் காணப்படாத ஏனையோருக்கு எழுதப்பட்ட வரைவுக் கடிதத் துணுக்குகளையும் (9 பக்கங்கள்) வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர் ஒருவருக்கான பதிலாள் நியமனம் தொடர்பான கையால் எழுதப்பட்ட கடிதப்பிரதி ஒன்றையும் கொண்டுள்ளது.

அடையாளம் காணப்படாத கடிதத் தொடர்பு

இக்கோப்பு செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட அநாமதேய மிரட்டல்/எச்சரிக்கை குறிப்புகளுடனான கடிதத் துணுக்கொன்றையும் தபாலட்டையொன்றையும் கொண்டுள்ளது.

அடையாளம் காணப்படாத கையெழுத்துக் குறிப்புகள்

இக்கோப்பு கையால் எழுதப்பட்ட 11 ஆவணங்களின் துணுக்குகளைக் கொண்டுள்ளது.

[அடையாளம் காணப்படாத தனிப்பட்ட கடிதங்கள்]

இக்கோப்பு மதி, கண்மணி (இப்பெயர்கள் உண்மையான பெயர்களா அல்லது செல்லப் பெயர்களா என்று தெரியவில்லை) என்னும் இருவருக்கிடையிலான 3 காதல் கடிதங்களைக் கொண்டுள்ளது.

[அடையாளம் காணப்படாத தனிப்பட்ட கடிதத் தொடர்பு - எ. கி. செல்வநாயகத்திற்கு அனுப்பப்பட்டவை]

இக்கோப்பு ஆறு கடிதங்களைக் கொண்டுள்ளது. தமிழில் எழுதப்பட்ட சங்கிலித் தொடர் முறைக் கடிதம் ஒன்றையும் உறவினர் பிள்ளையொருவரால் எழுதப்பட்ட கடிதமொன்றையும் அடையாளம் காண இயலாத கையொப்பங்கள் கொண்ட ஏனைய கடிதங்களையும் கொண்டுள்ளது.

[அடையாளம் காணப்படாத தனிப்பட்ட கடிதத் தொடர்பு எஸ். ஜே. வி. செல்வநாயகத்திற்கு அனுப்பப்பட்டவை]

தமிழில் எழுதப்பட்ட நான்கு கடிதங்களைக் கொண்டுள்ளது. இரண்டு கடிதங்கள் கசங்கியும் கிழிந்தும் காணப்படுகின்றன. மற்றும், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஐந்து குறிப்புகளும் கடிதங்களும் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, யாழ்ப்பாண விவசாய அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது, பாதியாகக் கிழிந்து காணப்படுகிறது.

முடிவுகள் 151 இலிருந்து 200 இன் 151094 வரை