Showing 151105 results

Archival description
அச்சு முன்காட்சி View:

[வாகன ஓட்டுனர் உரிமம் - எஸ். ஜே. வி. செல்வநாயகம்]

வாகன ஓட்டுனர் உரிமத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள ஒரு பகுதி - எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் கறுப்பு வெள்ளை ஒளிப்படமொன்று ஒட்டப்பட்டுள்ளது.

வள்ளியம்மை ஆச்சி - நாகப்பா செட்டியாரும் ஏனையோரும்

இக்கோப்பு வள்ளியம்மை ஆச்சி எதிர் நாகப்ப செட்டியாரும் பிறரும் வழக்கு தொடர்பாக இந்திய உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பிரதியொன்றைக் கொண்டுள்ளது.

வரதராஜக் குருக்கள், வி. - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

கோயில் குருக்கள் ஒருவர் செல்வநாயத்திற்கு விபூதி அனுப்பிய குறிப்பு.

[வன்னி குடியேற்றங்கள்/ வன்னி குடியேற்றத் திட்டங்கள்]

இக்கோப்பு வன்னி குடியேற்றத் திட்டங்கள் தொடர்பான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது. நில ஒதுக்கீட்டுக் கோரிக்கைகள், நில உரிம ரத்துப் பிரச்சினைகள், நீர்ப்பாசனச் சிரமங்கள், பொதுப் போக்குவரத்து வசதி பற்றாக்குறை போன்ற விடயங்கள் தொடர்பான கடிதங்கள், தபாலட்டைகள், படிவங்கள் ஆகிய ஆவணங்களைக் கொண்டுள்ளது.
 

வட்டுக்கோட்டை தொகுதி - பெயர் பட்டியல்

பக்கம் (ஆ), பக்கம் (அ)வின் பின்புறம்.திகதியிடப்பட்ட சு. ம. மாணிக்கராசா (திருக்கோணமலை நெசவு நிலையத் தலைவர்) - திருக்கோணமலை மக்கள் அறிவித்தல் பக்கம் (ஆ)வில் இணைக்கப்பட்டுள்ளது.

[வடக்கில் பொருளியல் மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி]

இக்கோப்பு வடமாகாண பொருளியல் மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி தொடர்பான பல்வேறு வினவல்கள், திட்ட முன்வரைவுகளையும் உள்ளூர் தொழிற்துறைகளான கற்பூர உற்பத்தி, பனங்கள்ளு மற்றும் தென்னங்கள்ளு விநியோகம், கூரை ஓடுகள் மற்றும் செங்கல் உற்பத்தி, விசைத்தறி பருத்தி ஆடை உற்பத்தியும் அச்சிடலும், இயந்திர மறுசீரமைப்பு மற்றும் அவற்றுடன் தொடர்பான கடிதங்கள், தந்திகள், அறிக்கைகள், கணக்குகள், குறிப்புகளையும் கொண்டுள்ளது. மேலும், இலங்கை தேசிய தொழிற்துறை கழகத்தைச் சேர்ந்த சி. அழகரத்தினம் என்பவரால் எழுதப்பட்ட கடிதம், அதனுடன் இணைக்கப்பட்ட 35 தொழிற்துறைகளின் பட்டியல், கழகத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற் குமுகாயங்கள், கழகத்தின் 1963 ஆண்டறிக்கை ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

வடகிழக்கு மாகாணங்களுக்கு அமைச்சர்கள் வருகை

இக்கோப்பு பிரதமர் மற்றும் அமைச்சர்களின் வடகிழக்கு மாகாண வருகை தொடர்பாக எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜே. சி. ஹன்டி, ஜே. பி. அரியநாயகம், வி. என். நவரட்னம், எஸ். சிவசுப்பிரமணியம், ஈ. எம். இராசமாணிக்கம் ஆகியோரால் எழுதப்பட்ட கடிதங்களைக் கொண்டுள்ளது. மேலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சுன்னாகம் அலுவலகத்தைச் சேர்ந்த ஆசிர்வாதம் ஹென்றி என்பவரால் அமைச்சர் அனில் முனசிங்கவை நோக்கிக் கேட்கப்பட்ட 15 வினாக்களின் பட்டியலைக் கொண்ட அச்சிடப்பட்ட அறிக்கையினையும் கொண்டுள்ளது.

வசீகரன், செ. : குறிப்புகள் & பல்வகை ஆவணங்கள்

இக்கோப்பு றோயல் கல்லூரியின் 1949 ஆம் ஆண்டு வருடாந்தப் பரிசளிப்பு விழாவின் நிகழ்ச்சி நிரல், அடையாளம் காண இயலாத கடிதமொன்றின் நான்காவது பக்கம், திருமணம்சார் வழக்கொன்றின் குறிப்புகள், கணிதக் குறிப்புகள் ஆகிய ஆவணங்களைக் கொண்டுள்ளது.

வசீகரன், செ.

இக்கோப்பு தனிப்பட்ட கடிதங்களையும் மற்றும் வசீகரனின் தாயாரின் (எமிலி கிரேஸ்) மறைவைத் தொடர்ந்து எழுதப்பட்ட இரங்கற் கடிதங்களையும் கொண்டுள்ளது.

முடிவுகள் 151 இலிருந்து 200 இன் 151105 வரை