அச்சு முன்காட்சி மூடுக

Showing 151105 results

Archival description
அச்சு முன்காட்சி View:

அந்தனி எஸ். ஜே. - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

இக்கோப்பு எஸ். ஜே. அந்தனியால் செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமொன்றையும் செல்வநாயகம் அவர்களால் எஸ். கந்தசாமி என்னும் ஆசிரியரின் கீரிமலை நகுலேஸ்வரா கல்லூரியிலிருந்தான இடமாற்றம் தொடர்பாக கல்வி அதிகாரிக்கு எழுதப்பட்ட வரைவுக் கடிதமொன்றையும் கொண்டுள்ளது.

[அனைத்து கட்சிகள் மாநாடு]

இக்கோப்பு தேசியப் பிரச்சினைகளான மொழி, குடியுரிமை, குடியேற்றம் ஆகிய விடயங்களை அனைத்து கட்சிகள் மாநாடு மூலம் தீர்ப்பது தொடர்பாக செல்வநாயகம் அவர்களுக்கும் ஏ. அசீஸ் (ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்) அவர்களுக்குமிடையில் இடம்பெற்ற கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது.

அன்ரன் சி. பொன்னம்பலம் - சா. ஜே. வே. செல்வநாயகம் கடிதம்

13-12-1964 திகதியிடப்பட்ட ஈழநாடு செய்தித்தாள் துணுக்குகள் மற்றும் 14-12-1964 திகதியிடப்பட்ட அன்ரன் சி. பொன்னம்பலம் - ஆசிரியர், ஈழநாடு கடிதம் இணைக்கப்பட்டுள்ளன.

அயல்நாட்டு நாணயப் பரிமாற்றக் கட்டுப்பாடு தொடர்பான வினாக்கள்

இக்கோப்பு வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான அயல்நாட்டு நாணயப் பரிமாற்றக் கட்டுப்பாடு தொடர்பான ஆவணங்களைக் கொண்டுள்ளது.

அரச மற்றும் பாரளுமன்ற அமைச்சு செயலாளர் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

தனது மகனின் கடவுச்சீட்டுப் பதிவு தொடர்பான செல்வநாயத்தின் உசாவலுக்கு அமைச்சு எழுதிய பதில் கடிதம்.

[அரசாங்க மின்சாரத் திணைக்களம்]

இக்கோப்பு அஞ்சல் உறையொன்றினையும் அரச மின்சாரத் திணைக்கள ஊழியர்களின் [?] பெயர்கள், ஊதிய விபரங்களைக் கொண்ட பட்டியலொன்றினையும் (8 பக்கங்கள்) கொண்டுள்ளது.

அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக எஸ். ஜே. வி. செல்வநாயகத்திற்கு அனுப்பப்பட்ட கேள்விகளும் குறிப்புகளும்

இக்கோப்பு இலங்கைத் தமிழர் வரலாறு, புவியியல், யாழ்ப்பாணத் தமிழர்கள் மலையகத் தமிழர்களைச் சுரண்டல், ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியப் பிரதமரின் வகிபாகம், இலங்கைத் தமிழர் போராட்டத்தின் வர்க்கப் பரிமாணம், இலங்கை முஸ்லிம்களின் சமய தேசிய உருவாக்கம் ஆகிய விடயங்கள் தொடர்பாக செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதக்கூடிய 6 கையால் எழுதப்பட்ட வினாக்கள்/ குறிப்புகளைக் கொண்டுள்ளது.

முடிவுகள் 201 இலிருந்து 250 இன் 151105 வரை