அச்சு முன்காட்சி மூடுக

Showing 151094 results

Archival description
அச்சு முன்காட்சி View:

அவசரகால சத்தியாக்கிரகம் 1961

இக்கோப்பு 1961ஆம் ஆண்டு நடைபெற்ற சத்தியாக்கிரகம் தொடர்பான கையெழுத்துக் கணக்கு அறிக்கைகள், கணக்காய்வு விண்ணப்பம் மற்றும் அறிக்கை, பல்வேறு சத்தியாக்கிரக செலவினங்கள், பண வழங்கல்களை விபரிக்கும் கடிதங்கள் ஆகிய ஆவணங்களைக் கொண்டுள்ளது. மேலும், தமிழரசுக் கட்சியின் சத்தியாக்கிரக இயக்கம், நாட்டின் அரசியல் நிலைமை தொடர்பாக செய்தித்தாட்களிலிருந்து வெட்டப்பட்ட மூன்று கட்டுரைகளையும் தட்டச்சிடப்பட்ட மூன்று கட்டுரைகளையும் கொண்டுள்ளது. மேலும், சத்தியாக்கிரக நினைவு தினத்தையொட்டி 1963ஆம் ஆண்டு கட்சி முன்மொழிந்த சந்திப்பு, பேரணி தொடர்பான அழைப்பிதழ்/ அறிக்கை ஒன்றினையும் இக்கோப்பு கொண்டுள்ளது.

ஆசியப் பிரச்சினைகள் - எல். ஐ. பிரெசித்தர் உரையின் சுருக்கம்

இக்கோப்பு ஆசியப் பிரச்சினைகள் என்னும் தலைப்பில் எல். ஐ. பிரெசித்தர் அவர்கள் அல்மா அட்டாவில் ஆற்றிய உரையின் சுருக்கத்தைக் கொண்டுள்ளது.

ஆசிரியர்களின் இடமாற்றங்கள்

இக்கோப்பு ஆசிரியர்களின் இடமாற்றம், இடமாற்றம் சார் கொள்கை தொடர்பாக எஸ். ஜே. வி. செல்வநாயகத்தாலும் ஏனையோராலும் எழுதப்பட்ட குறிப்பாணைகள், ஊடக அறிக்கைகள், தந்திகள், கடிதங்கள், தட்டச்சிடப்பட்ட குறிப்புகள் போன்ற ஆவணங்களைக் கொண்டுள்ளது.

[ஆயுர்வேதக் கல்லூரி - மருத்துவர், என். இரத்னசபாபதி]

இக்கோப்பு ஆயுர்வேத கல்லூரி சித்த விரிவுரையாளர் பதவிக்கு மருத்துவர், என். இரத்னசபாபதி அவர்கள் சமர்பித்த விண்ணப்பம் தொடர்பான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது.

ஆர். டபிள்யூ. வி. அரியநாயகம் கட்சியின் பொதுச் செயலாளர் இ. மு. வி. நாகநாதனிற்கு எழுதிய பதில் கடிதம்

இக்கடிதத்தில் திரு. R.W.V. அரியநாயகம் அவர்கள் கடந்த மூன்று மத்திய செயற்குழு கூட்டங்களூக்கு சமூகமளிக்க முடியாமைக்கான காரணங்களையும் எதிர்வரும் தை 26ம் திகதி திருகோணமலையில் நடக்கவிருக்கும் கூட்டத்திற்கு வருகை தர முடியாதுள்ளமை பற்றியும் குறிப்பிட்டு மன்னிப்புக் கேட்டுள்ளார். மேலும் இவர் கட்சி பொதுச் செயலாளர் திரு. இ.மு.வி. நாகநாதனிடம், தான் கட்சியின் நேர்மையான கடின உழைப்பாளி என்று குறிப்பிட்டு தயவு செய்து அவரை மன்னித்து பதவியைப் பறிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொன்டுள்ளார்.

முடிவுகள் 251 இலிருந்து 300 இன் 151094 வரை