அச்சு முன்காட்சி மூடுக

Showing 151105 results

Archival description
அச்சு முன்காட்சி View:

யாழ்ப்பாண வைத்தியசாலை

இக்கோப்பு யாழ்ப்பாண வைத்தியசாலைச் செயற்குழுவின் மீளமைப்பு தொடர்பான கடிதத் தொடர்புகளைக் கொண்டுள்ளது. எஸ். ஜே. வி. செல்வநாயகத்தால் சுகாதார அமைச்சுக்கும் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுதப்பட்ட கடிதங்களையும் அவர்களின் பதில் கடிதங்களையும் கொண்டுள்ளது. மேலும், வைத்தியசாலைச் செயற்குழுவின் 32ஆவது கூட்டம் தொடர்பான விவரமான கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளையும் இக்கோப்பு கொண்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க முகவர் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்

இக்கோப்பு மாவட்ட விவசாய செயற்குழுவின் கூட்ட நடவடிக்கைக் குறிப்புகள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டத்து அரசாங்கப் பிரதிநிதியால் செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமொன்றையும் யாழ்ப்பாண மாவட்டத்து மானாவாரி நிலங்களின் நீர்ப்பாசன விதிமுறைகள் தொடர்பான வரைவொன்றையும் கொண்டுள்ளது.

[யாழ் மக்கள் தொழிலாளர் சங்கம்]

இக்கோப்பு யாழ் மக்கள் தொழிலாளர் சங்கம் எனப்படும் புதிய தொழிலாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் பதிவீடு தொடர்பான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்துத் துறைமுகத் தொழிலாளர்களின் பணி குறித்தும் நடைமுறையிலுள்ள கூட்டுறவு ஒன்றியங்கள்/ தொழிற்சங்கங்கள், கப்பல் சுமையிறக்கும் தொழிற்துறையில் அவற்றின் வகிபாகம், புதிய யாழ் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் சட்டரீதியான செல்லுபடியாகாததன்மை போன்றன தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவுத் துறைமுகச் சேவை சமாசத்தினால் செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமொன்றினையும் உள்ளடக்கியுள்ளது.

[மொழிப் பாரபட்சம் - எழுதுவினைஞர் சேவை]

இக்கோப்பு குடிமுறை அரசுப் பணியின் பல்வேறு அரச திணைக்களங்களில் தமிழ் பேசும் அரசுப் பணியாளர்களின் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவற்றில் இடம்பெறும் பாரபட்ச நடைமுறைகள் தொடர்பான கடிதங்கள், குறிப்பாணைகள், தந்திகள் போன்ற ஆவணங்களைக் கொண்டுள்ளது.

[மொழிப் பாரபட்சம் - உள்நாட்டு இறைவரித் திணைக்களம்]

இக்கோப்பு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் கடிதத் தொடர்புகள் மற்றும் படிவங்களில் இடம்பெறும் மொழிப் பாரபட்சம் குறித்து எஸ். ஜே. வி. செல்வநாயகம், எம். பி. இராசநாயகம், எஸ். சிவபாதசுந்தரம் ஆகியோரால் எழுதப்பட்ட 3 கடிதங்களைக் கொண்டுள்ளது.

[மொழிப் பாரபட்சம் - அஞ்சல் சேவைகள், மாவட்ட செயலகம், காவல் நிலையங்கள்]

இக்கோப்பு 3 கடிதங்களைக் கொண்டுள்ளது. முதலாவது, பொகவந்தலாவை தபால் நிலையம் தமிழில் எழுதப்பட்ட பதிவுத்தபாலை ஏற்க மறுத்தமை தொடர்பாக முத்துலெட்சுமி தோட்டத் தமிழ் மன்றத்தால் செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமாகும். இரண்டாவது, வவுனியா கச்சேரியால் [மாவட்ட செயலகம்] பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இருந்தமை தொடர்பாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வவுனியா கிளைச் செயலாளரால் ரி. பி. இளங்கரத்னே அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமாகும். மூன்றாவது, காவல் நிலைய முறைப்பாடுகள் தமிழில் பதியப்படும் என்பதை உறுதிப்படுத்தி ஈ. எல். அபேகுணவர்த்தனவால் செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமாகும்.

[மொழிப் பாரபட்சம் - அஞ்சல் சேவைகள்]

இக்கோப்பு தமிழில் அஞ்சல் சேவைகள் தொடர்பான ஆவணங்களையும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள அஞ்சல் திணைக்களங்களில் தமிழில் சேவை வழங்கப்படாமை குறித்த ஆவணங்களையும் கொண்டுள்ளது. கடிதங்கள், தந்திகள், அடையாள அட்டைப் பிரதி, பண அஞ்சல் படிவங்கள் போன்ற ஆவணங்களைக் கொண்டுள்ளது. மேலும், எகெலியகொடைப் பிரதேசத்தில் வதியும் தமிழரால் (133 பெயர்கள், கையெழுத்துக்கள் முகவரிகளுடன்) தமது நகரின் அஞ்சல் சேவைகளில் இடம்பெறும் மொழிப் பாரபட்சத்தினை விவரித்து எழுதப்பட்ட கடிதமொன்றையும் கொண்டுள்ளது.

[மே தினம்/ உலக உழைப்பாளர் நாள்]

இக்கோப்பு மேதினக் கொண்டாட்டங்கள் தொடர்பான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது. எஸ். ஜே. வி. செல்வநாயகம், வி. தங்கவேல், ஈ. நாகேந்திரம், ஈ. பத்மநாதன் ஆகியோரால் எழுதப்பட்ட 5 கடிதங்களைக் கொண்டுள்ளது.

[மூன்று ஆசிரியர்களின் தடுப்புக்காவல் 1961]

இக்கோப்பு 1961ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட மூன்று ஆசிரியர்களான: (1) காப்ரியல் பெஞ்சமின் வின்சென்ற் (தலைமையாசிரியர், முல்லைதீவு வி/சீலாவதி றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயம்); (2) கே. சிவகுரு (ஆசிரியர், திருக்கோணமலை சிறீசண்முகம் வித்தியாலயம்); (3) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அழகையா ஆகியோர் தொடர்பான கடிதத் தொடர்புகளைக் கொண்டுள்ளது. ஜி. பி. வின்சென்ற், எஸ். ஜே. வி. செல்வநாயகம், கே. சிவகுரு ஆகியோரால் எழுதப்பட்ட ஏழு கடிதங்களைக் கொண்டுள்ளது.

[மூதூர் தேர்தல் தொகுதி]

இக்கோப்பு மூதூர் தேர்தல் தொகுதி தொடர்பான ஆவணங்களைக் கொண்டுள்ளது. மூதூர் தமிழ்ப் பிரதேசத்தில் கிராம சேவகர் நியமனம், தமிழ்ப் பாடசாலைத் தலைமையாசிரியர் ஒருவரின் இடமாற்றம், தம்பலகாமம் புகையிரத நிலையத்தின் தமிழ்ப் பெயர் தம்பலகமுவ என்று மாற்றப்படல், தமிழ்க் கிராமங்களை நிர்வாக ரீதியாகப் பிரித்தல், முன்மொழியப்பட்ட சேருவில, தெகிவத்தை உள்ளூராட்சி மன்றங்கள் போன்ற விடயங்களை உள்ளடக்கிய கடிதங்கள், தந்திகள், செய்தித்தாள் கட்டுரைகள், கையால் வரையப்பட்ட நிலப்படங்கள் ஆகிய ஆவணங்களைக் கொண்டுள்ளது.

மூதவைத் தேர்தல், தமிழரசுக் கட்சியின் மூதவை உறுப்பினர்

இக்கோப்பு 1965 மூதவை (செனட்டர்) தேர்தல் தொடர்பான ஆவணங்களைக் கொண்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் மூதவை உறுப்பினர் பதவி தொடர்பில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வழங்கிய பரிந்துரைகளை உள்ளடக்கிய கடிதங்கள், தந்திகள், தட்டச்சிடப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

[முகவரிப் பட்டியல்களும் எழுதுபொருட்களும்]

முகவரிகள் எழுதப்பட்ட ஒரு சிறிய 1974 ஆண்டைச் சேர்ந்த நினைவுக் குறிப்பேட்டையும் முகவரிகள் எழுதப்பட்ட நான்கு இளஞ்சிவப்பு நிறத் தாள்களையும் செல்வநாயகத்தின் இரு வெற்று எழுதுபொருட்களையும் கொண்டுள்ளது.

முடிவுகள் 301 இலிருந்து 350 இன் 151105 வரை