அச்சு முன்காட்சி மூடுக

Showing 133879 results

Archival description
அச்சு முன்காட்சி View:

Victoria University (Toronto, Ont.). Bursar's Office fonds

  • CA ON00357 2001
  • Fonds
  • 1831-2017

Fonds consists of the records from the Upper Canada Academy and the period when Victoria University (formerly College) was situated in Cobourg. It includes records of the Academy Treasurer, John Beatty and of the Bursars/Treasurers, John Potts and George Cox.

Subsequent records are from the Bursars of Victoria University:
W.J. Little (1932-1951)
W.C. James (1951-1963)
F.C. Stokes (1963-1985)
Larry Kurtz, (1985-2003)
David Keeling (2004-2009)
Ray deSouza (Present)

Victoria University (Toronto, Ont.). Bursar's Office

Records related to real estate

Series consists of correspondence, leases and other legal agreements, court documents, surveys, deeds, mortgage records, sketches, financial and other records, 1871-2009, relating to the administering of properties owned by Victoria and not used for academic purposes, and for maintaining Victoria's interest in property developments which affected the University. The records relate to insurance, including liability, and the planning and development, management and leasing, acquisition and sales of property, taxes, property disputes and litigation.

The architectural plans and drawings have been separated into Sub-Series 1.

The Bursar's responsibilities with regard to property were initially the insurance of buildings and their contents. However, as the
need for regular income became more urgent and evident, and as the University expanded and required more buildings, the Bursar's work likewise increased. The Bursar became responsible for the legal negotiations and accounting over purchases, sales and leases; and the supervision and funding of alterations and renovations and the construction of new buildings. Along with this the Bursar dealt with property tax as the University was only exempt from this in respect to its property used for academic purposes.

[இலங்கைத் தமிழரசுக் கட்சி வட்டுக்கோட்டை கிளை]

இக்கோப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை கிளை தொடர்பான கடிதங்கள், தபாலட்டைகள், கிளைச் செயற்பாடுகள், உறுப்புரிமை சந்தா பட்டியல் போன்ற ஆவணங்களைக் கொண்டுள்ளது.

[விடுதலைப் பரணி]

இக்கோப்பு விடுதலைப் பரணி வெளியீடு, அதனுடன் தொடர்புடைய செலவினங்கள் குறித்த இரு கடிதங்களைக் கொண்டுள்ளது.

[பொதுத் தேர்தல் - 1965]

இக்கோப்பு 1965 பொதுத் தேர்தல் தொடர்பான ஆவணங்களைக் கொண்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் முன்னேற்பாடுகள், பரப்புரைகள், வேட்பாளர் நியமன விண்ணப்பங்கள், முன்மொழிவுகள், தேர்தல் நிதி சேகரிப்பு போன்ற விடயங்களை உள்ளடக்கிய கடிதங்கள், தந்திகள், கையால் எழுதப்பட்ட விண்ணப்பங்கள், செலவினங்கள், கணக்குகள், செய்தித்தாள் துணுக்குகள் ஆகிய ஆவணங்களைக் கொண்டுள்ளது. மேலும், வேட்பாளர் பட்டியல்கள் சிலவற்றையும் சிலோன் டெய்லி நியூஸில் 1960 இல் வெளிவந்த தேர்தல் குறித்த கட்டுரையொன்றினையும் கொண்டுள்ளது.

[திருமண தங்க ஆபரணங்கள்]

இக்கோப்பு தமிழ்த் திருமணங்களில் பயன்படுத்தப்படும் தாலிக்கொடி உருவாக்குவதற்கான தங்கத்தைக் கொள்வனவு செய்வதிலுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பான இரு கடிதங்களைக் கொண்டுள்ளது.

[இலங்கைத் தமிழரசுக் கட்சிக் கிளைகள் - அம்பாறை மாவட்டம்]

இக்கோப்பு அம்பாறை மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சிக் கிளைகள் தொடர்பான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது. கட்சிக் கிளை அலுவலகங்களின் பெயர்கள், கிளை மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களின் பெயர்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

[கிளிநொச்சி மற்றும் அக்கராயன்குளத்தை வதிவிடமாகக் கொண்ட இந்திய வம்சாவளியினர்]

இக்கோப்பு கிளிநொச்சி மற்றும் அக்கராயன்குளத்தை வதிவிடமாகக் கொண்ட இந்திய வம்சாவளியினரின் நிலைமை தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் (யாழ்ப்பாண மாவட்டம்) எஸ். தொண்டமான் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமொன்றினைக் கொண்டுள்ளது.

[1964 சூறாவளி]

இக்கோப்பு 1964இன் சூறாவளி, புயல் நிவாரண முயற்சிகள், சூறாவளி காரணமாக மீன்பிடித்துறை எதிர்கொண்ட சேதங்கள் ஆகியன தொடர்பான கடிதங்கள், தட்டச்சிடப்பட்ட குறிப்புகள், தீர்மானங்கள், குறிப்பாணைகளைக் கொண்டுள்ளது. பிரதானமாக, எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்கள் பல்வேறு அரச அதிகாரிகளுக்கு எழுதிய கடிதங்கள், ஆவணங்களை உள்ளடக்கியுள்ளது.

[ஆயுர்வேதக் கல்லூரி - மருத்துவர், என். இரத்னசபாபதி]

இக்கோப்பு ஆயுர்வேத கல்லூரி சித்த விரிவுரையாளர் பதவிக்கு மருத்துவர், என். இரத்னசபாபதி அவர்கள் சமர்பித்த விண்ணப்பம் தொடர்பான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது.

[நெற்காணிச் சட்டத்தின் குறைபாடுகள்]

இக்கோப்பு யாழ்ப்பாண விவசாயிகள், நெற்காணிகளை ஆதாரமாகக் கொண்டு நெற்காணிச் சட்டத்தின் குறைபாடுகள்/ வரையறைகள் குறித்து என். செல்வவிநாயகமூர்த்தி அவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணமொன்றைக் கொண்டுள்ளது.

[கைத்தறி தொழிற்துறை]

இக்கோப்பு நெசவுத் தொழிற்துறை மற்றும் புதிய அரசாங்கத்தின் நாடு முழுதிலும் 1,000 கைத்தறி நிலையங்கள் அமைக்கும் திட்டம், வடக்கில் புதிய கைத்தறி நிலையங்கள் அமைப்பது தொடர்பில் ஆர்வம் தெரிவித்து இரு உள்ளூர் நெசவுத் தொழிற்சங்களால் எழுதப்பட்ட நான்கு கடிதங்களைக் கொண்டுள்ளது.

[1965 தேர்தலுக்கு பின்னைய கடிதத் தொடர்பு]

இக்கோப்பு 1965 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து இடம்பெற்ற டட்லி சேனாநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தைகள், அளிக்கப்பட்ட அமைச்சர் பதவி குறித்த உரையாடல்கள், புதிய அரசாங்கத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வகிபாகம் போன்ற விடயங்கள் தொடர்பான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது.

[தமிழ் மாணவ ஆசிரியர்கள்]

இக்கோப்பு தமிழ் மாணவ ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை நுழைவுத் தேர்வு ஆகியன தொடர்பான ஆவணங்களைக் கொண்டுள்ளது. தமிழ் மாணவ ஆசிரியர்களின் பதவி உயர்வு, இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகளை விவரிக்கும் தட்டச்சிடப்பட்ட ஆவணமொன்றினையும் ஆறு கடிதங்களையும் கொண்டுள்ளது.

[அனைத்து கட்சிகள் மாநாடு]

இக்கோப்பு தேசியப் பிரச்சினைகளான மொழி, குடியுரிமை, குடியேற்றம் ஆகிய விடயங்களை அனைத்து கட்சிகள் மாநாடு மூலம் தீர்ப்பது தொடர்பாக செல்வநாயகம் அவர்களுக்கும் ஏ. அசீஸ் (ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்) அவர்களுக்குமிடையில் இடம்பெற்ற கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது.

[உறுப்பினர் வெளியேற்றம் தொடர்பான கட்சி கடிதத் தொடர்பு]

இக்கோப்பு இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுக் குழுவிலிருந்து இரு உறுப்பினர்களை (சி. வன்னியசிங்கம், ஆர். டபிள்யூ, வி. அரியநாயகம்) வெளியேற்றுவது தொடர்பான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது.

[உள்ளூராட்சித் தேர்தல் கட்சி சின்னங்கள்]

இக்கோப்பு உள்ளூராட்சித் தேர்தலில் கட்சிச் சின்னங்கள் குறித்த கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது. மேலும், இதனுடன் தொடர்புடைய அரச வர்த்தமானி அறிக்கையின் மூலப் பிரதியொன்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மூதவைத் தேர்தல், தமிழரசுக் கட்சியின் மூதவை உறுப்பினர்

இக்கோப்பு 1965 மூதவை (செனட்டர்) தேர்தல் தொடர்பான ஆவணங்களைக் கொண்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் மூதவை உறுப்பினர் பதவி தொடர்பில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வழங்கிய பரிந்துரைகளை உள்ளடக்கிய கடிதங்கள், தந்திகள், தட்டச்சிடப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

[ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாறு தொடர்பான நூல் கண்காட்சி]

இக்கோப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 1966 மாநாட்டில் காட்சிப்படுத்தும் நோக்குடன் முன்மொழியப்பட்ட ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாறு (ஆர். கனகரத்தினம், பவளராணி கனகரத்தினம்) தொடர்பான நூல் கண்காட்சி குறித்த இரு கடிதங்களைக் கொண்டுள்ளது.

[இலங்கை துறைமுக தொழிலாளர் கழகம்]

இக்கோப்பு திட்ட வளராக்கம் மற்றும் தமது அமைப்பின் கீழ் மேலதிகத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டுவதற்கு நிதியுதவி கோரி இலங்கைத் துறைமுகத் தொழிலாளர் கழகத்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எழுதப்பட்ட இரு கடிதங்களைக் கொண்டுள்ளது.

[இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் பரப்புரைச் செலவினங்கள்]

இக்கோப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் பரப்புரைச் செலவினங்கள் மற்றும் கொடுப்பனவுப் பற்றுச்சீட்டுகள் தொடர்பான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது.

கிழக்கிலங்கை சீவல் தொழிலாளர் சங்கம்

இக்கோப்பு இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சீவல் தொழிலாளர் சமூகம் குறித்த கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது. கிழக்கிலுள்ள சீவல் தொழிலாளர் சமூகத்தின் புவியியல் மற்றும் சமூகப் பின்புலத்தையும் தற்போது அச்சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் விவரிக்கும் ஏழு பக்கங்கள் நீளமான ஒரு மனுவை உள்ளடக்கியுள்ளது.

[மருந்தகங்களும் மருந்து விநியோகத் துணை நிலையங்களும்]

இக்கோப்பு மருந்தகங்கள், மருந்தாளுநர் ஆட்சேர்ப்புக்கான தேர்வு, சுகாதார திணைக்களத்தின் மருத்துவ நிறுவனங்களுக்கான மருந்து விநியோகத்தினைப் பன்முகப்படுத்தி பகிர்ந்தாளும் முன்மொழிவு, வடகிழக்கில் மருந்து விநியோகத் துணை நிலையங்களின் பற்றாக்குறை ஆகியன குறித்த கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது.

[தமிழ் விவசாயத் தகுதிச் சான்றிதழ் கொண்டோருக்கான ஆசிரிய நியமனங்கள்]

இக்கோப்பு குண்டசாலை விவசாயக் கல்லூரியைச் சேர்ந்த தமிழ் விவசாயத் தகுதிச் சான்றிதழ் கொண்டோருக்கான ஆசிரிய நியமனங்கள் குறித்த இரு கடிதங்களைக் கொண்டுள்ளது.

[யாழ் மக்கள் தொழிலாளர் சங்கம்]

இக்கோப்பு யாழ் மக்கள் தொழிலாளர் சங்கம் எனப்படும் புதிய தொழிலாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் பதிவீடு தொடர்பான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்துத் துறைமுகத் தொழிலாளர்களின் பணி குறித்தும் நடைமுறையிலுள்ள கூட்டுறவு ஒன்றியங்கள்/ தொழிற்சங்கங்கள், கப்பல் சுமையிறக்கும் தொழிற்துறையில் அவற்றின் வகிபாகம், புதிய யாழ் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் சட்டரீதியான செல்லுபடியாகாததன்மை போன்றன தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவுத் துறைமுகச் சேவை சமாசத்தினால் செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமொன்றினையும் உள்ளடக்கியுள்ளது.

[இலங்கை அரச சேவையிலுள்ள தமிழ் ஊழியர்கள்]

இக்கோப்பு இலங்கை அரச சேவையிலுள்ள தமிழர் தொடர்பான கடிதத் தொடர்பைக் கொண்டுள்ளது. தட்டெழுத்தர் தேர்வு, புதிதாகச் சேர்ந்த தமிழ் ஊழியர்களுக்கு எழுத்தர் சேவைப் பயிற்சி, இலங்கை இராணுவத்தில் பணிபுரிந்த ஒரு தமிழ்ப் படைத்தலைவரின் சேவை ஓய்வூதியம் போன்ற விடயங்கள் தொடர்பான கடிதங்களை உள்ளடக்கியுள்ளது.

[இலங்கை கூட்டுறவு கல்லூரி, பொல்கொல்லை]

இக்கோப்பு பொல்கொல்லையிலுள்ள இலங்கை கூட்டுறவு கல்லூரியின் தமிழ்க் கூட்டுறவு ஆய்வாளர் பயிற்சி வகுப்பு கைவிடப்பட்டமை தொடர்பான மூன்று கடிதங்களைக் கொண்டுள்ளது.

[கந்தசாமி, முத்துசாமி வி. - சிவஞானசுந்தரம் கடிதம்]

இக்கோப்பு வி. முத்துசாமி கந்தசாமி அவர்களால் சிவஞானசுந்தரம் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமொன்றைக் கொண்டுள்ளது.

[பெருந்தோட்டப் பாடசாலைகளும் ஆசிரியர்களும்]

இக்கோப்பு தமிழ்மொழி மூலப் பெருந்தோட்டப் பாடசாலைகள், அப்பாடசாலை ஆசிரியர்கள் தொடர்பான ஆவணங்களைக் கொண்டுள்ளது. பெருந்தோட்டப் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்களின் நியமனம் தொடர்பாக சுதந்திரனில் வெளிவந்த பொதுவிளிப்பைத் [க.பொ.த. சாதாரணதரச் சித்தியடைந்தோர் கல்வி கற்பித்தலில் ஆர்வமிருப்பின் கடிதம் மூலம் தொடர்பு கொள்ளக்கோரி] தொடர்ந்து செல்வநாயகம் அவர்களுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு கடிதங்களைக் கொண்டுள்ளது.

[கல்முனை தேர்தல் தொகுதி]

இக்கோப்பு கல்முனை தேர்தல் தொகுதி தொடர்பான ஆவணங்களைக் கொண்டுள்ளது. கல்முனை தமிழரசுக் கட்சிக் கிளைச் செயற்பாடுகள், தேர்தல் தொகுதியில் புதுக் கட்சிக் கிளைகள் உருவாக்கம், வேட்பாளர் நியமனங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய கடிதங்கள், தந்திகள், குறிப்பாணைகளைக் கொண்டுள்ளது. மேலும், சூறாவளி தொடர்பாக செல்வநாயகம் அவர்களால் எழுதப்பட்ட கடிதமொன்றினையும் கொண்டுள்ளது.

முடிவுகள் 1 இலிருந்து 50 இன் 133879 வரை