Fonds 014 - சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம் 

அடையாளப் பரப்பு

உசாத்துணைக் குறி

CA UTSC 014

தலைப்பு

சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சேகரம் 

திகதி

  • n.d., 1921, 1929-1930, 1933-1937, 1939-1940, 1944-1988 (Creation)

விவரிப்பு மட்டம்

Fonds

அளவும் ஊடகமும்

1.9 மீ. எழுத்தாவணங்கள் 

சூழமைவுப் பரப்பு

ஆக்கியவரின் பெயர்

(1898-1977)

வாழ்க்கை வரலாற்று வரலாறு?

சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் மலேசியாவிலுள்ள ஈப்போ நகரில் 31 மார்ச் 1898 இல் வணிகரான விசுவநாதன் வேலுப்பிள்ளை அவர்களுக்கும் ஹரியட் அன்னம்மா கணபதிப்பிள்ளை அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே தனது தாயாருடனும் இரு சகோதரர்கள், ஒரு சகோதரியுடனும் கல்வி கற்கும் நோக்குடன் இலங்கையிலுள்ள தெல்லிப்பழைக்குத் திரும்பினார். செல்வநாயகம் தனது ஆரம்பகாலக் கல்வியினை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் எட்டு வருடங்கள் பயின்றார். பின்னர், பரி. யோவான் கல்லூரியில் ஐந்து வருடங்களும் கல்கிசையிலுள்ள புனித தோமையர் கல்லூரியிலும் கல்வி பயின்றார். 1918 ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராகப் பயின்று அறிவியல் துறையில் பட்டம் பெற்றார். 1927 ஆம் ஆண்டு எமிலி கிரேஸ் பார் குமாரகுலசிங்கத்தைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.

செல்வநாயகம் புனித தோமையர் கல்லூரியில் ஆசிரியராக சில காலம் பணிபுரிந்தார். 1919 ஆம் ஆண்டு உவெஸ்லிக் கல்லூரியில் கணித ஆசிரியராகச் சேர்ந்து, பின்னர் அக்கல்லூரியின் அறிவியல் துறைத் தலைவராகவும் பணிபுரிந்தார். உவெஸ்லிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது இலங்கை சட்டக் கல்லூரியில் கல்வி கற்று சட்ட அறிஞரானார். செல்வநாயகம் தனது சட்டத் தொழிலை கொழும்பு விண்ணப்ப நீதிமன்றத்தில் ஆரம்பித்தார். அங்கிருந்து மாவட்ட நீதிமன்றத்திலும் பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றங்களிலும் வழக்குரைஞராக விளங்கினார். 31 மே 1947 இல் இராணியின் வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார்.

செல்வநாயகம் தனது வழக்குரைஞர் தொழிலை விடுத்து 1944 இல் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முதன்மை ஒழுங்கமைப்பாளராக அரசியலில் இணைந்தார். 1947 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். 18 டிசம்பர் 1949 இல் செல்வநாயகம் இலங்கை தமிழரசுக் கட்சியை ஈ. எம். வி. நாகநாதன் மற்றும் வி. நவரத்தினம் ஆகியோருடன் இணைந்து உருவாக்கினார். இது சமஷ்டிக் கட்சி எனவும் அழைக்கப்பட்டது. ஈ. எம். வி. நாகநாதனும் வி. நவரத்தினமும் இணைச் செயலாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். செல்வநாயகம் தமிழ்ச் செய்தித்தாளான சுதந்திரனின் இயக்குனராகவும் விளங்கினார்.

தமிழ் மக்களின் அடையாளத்தையும் உரிமைகளையும் காப்பதற்கு உழைத்தமையால் செல்வநாயகம் தமிழ் மக்களால் தந்தை செல்வா என அழைக்கப்பட்டார்.

26 ஜூலை 1957 இல் பிரதமருடன் இணைந்து பண்டாரநாயக்கா-செல்வநாயகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது தமிழ்மொழிக்கு சம உரிமை, தமிழ்ப் பாரம்பரிய நிலங்களில் குடியேற்றங்கள் ஒழிப்பு, தமிழ் மாகாணங்களுக்கு சுயாட்சி, மலையக மக்களுக்கு இலங்கைக் குடியுரிமை ஆகியவற்றை கோரி நின்றது (எஸ். ஜே. வி. செல்வநாயகமும் இலங்கை தமிழ்த் தேசியத்தின் நெருக்கடி நிலையும் / ஏ. ஜே. வில்சன்). 24 மார்ச் 1965 இல் செல்வநாயகம் 1958 இன் தமிழ்மொழி சிறப்பு உரிமைகள் சட்டம் எண். 28 என்னும் சட்டத்தைக் கவனப்படுத்திய சேனாநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். எனினும், இது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

செல்வநாயகத்தின் உடல்நிலை பார்க்கின்சனின் நோய் காரணமாக மிலவும் நலிவடைந்திருந்தது. இதற்கான சத்திரசிகிச்சையை எடின்பர்க் நகரில் அவர் மேற்கொண்டார். மார்ச் 1977 இல் நிலத்தில் வீழ்ந்து ஏற்பட்ட தலைக்காயங்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 26 ஏப்ரல் 1977 இல் இயற்கை எய்தினார்.

ஆவண வரலாறு

Immediate source of acquisition or transfer

ஆவணங்கள் எஸ். ஜே. வி. செல்வநாயத்தால் முதன்மையாகச் சேகரிக்கப்பட்டுள்ளன. 26 ஏப்ரல் 1977 இல் அவரது மறைவைத் தொடர்ந்து, அவரது துணைவியாரான எமிலி கிரேஸ் செல்வநாயகமும் அவரது பிள்ளைகளும் தொடர்ந்து இவ் ஆவணங்களைச் சேகரித்துள்ளனர். 5 ஆகஸ்ட் 1988 இல் எமிலி கிரேஸின் மறைவைத் தொடர்ந்து இவ் ஆவணங்கள் அவரது மகளான சுசீலாவதி (சுசீலி) வில்சனால் ரொறன்ரோ, ஒன்ராறியோவில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.

உள்ளடக்கம், கட்டமைவுப் பரப்பு?

நோக்கமும் உள்ளடக்கமும்

விளங்கியமையையும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாளாந்த நடவடிக்கைகளையும் இச்சேகரம் பிரதிபலிக்கிறது.

இச்சேகரம் இலங்கையில் 1950 இலிருந்து 1970 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற முக்கியமான அரசியல் நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதோடு இலங்கைத் தமிழர்கள் எதிர்கொண்ட போராட்டங்களுக்கு சாட்சியமாகவும் விளங்குகிறது.

இச்சேகரம் செல்வநாயகம் அவர்களின் குடும்பம், பின்புலம் தொடர்பான ஆவணங்களையும் அவரது துணைவியார் எமிலி கிரேஸ் செல்வநாயகம் சேகரித்த நினைவஞ்சலி ஆவணங்களையும் கொண்டுள்ளது. மூன்று பிரதான வரிசைகளாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இச்சேகரம் 1933-1937, 1939-1940, 1944-1988 ஆகிய காலப்பகுதிகளுக்கான ஆவணங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் பெருளவிலான ஆவணங்கள் 1960, 1970 காலப்பகுதியைச் சேர்ந்தவை ஆகும்.

தனிப்பட்ட ஆவணங்கள் கடிதத் தொடர்பு, தனிப்பட்ட பொருட்கள், நிதி மற்றும் தேயிலைத் தோட்டத்துடன் தொடர்புடைய ஆவணங்கள், ஏனைய ஆவணங்களை உள்ளடக்கியுள்ளன. தொழில்சார் ஆவணங்கள் அலுவலகக் கோப்புகள், கட்சி ஆவணங்கள், கடிதத் தொடர்பு, ஏனைய ஆவணங்களை உள்ளடக்கியுள்ளன. நினைவஞ்சலி ஆவணங்கள் சுவரொட்டிகள், செய்தித்தாள் துணுக்குகள், நினைவஞ்சலிக் குறிப்பேடு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. இச்சேகரம் பின்வருமாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது:

  1. தனிப்பட்ட ஆவணங்கள்
    1.1. எஸ். ஜே. வி. செல்வநாயகம் தனிப்பட்ட கடிதத் தொடர்பு
    1.2. எஸ். ஜே. வி. மற்றும் எமிலி கிரேஸ் செல்வநாயகம் கடிதத் தொடர்பு
    1.3. எமிலி கிரேஸ் செல்வநாயகம் கடிதத் தொடர்பு
    1.4. தனிப்பட்ட பொருட்கள்/உடைமைகள்
    1.5. பல்வகை கடிதத் தொடர்பு
    1.6. பல்வகை குடும்ப ஆவணங்கள்
    1.7. நிதி ஆவணங்கள்
  2. தொழில்சார் ஆவணங்கள்
    2.1. தொழில்சார் கோப்புகள்
    2.2. தொழில்சார் கடிதத் தொடர்பு
    2.3. ஆவணங்கள்
    2.4. அச்சிடப்பட்ட ஆவணங்கள்
    2.5. சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட்/ சுதந்திரன்
    2.6. இலங்கை தமிழரசுக் கட்சி கோப்புகள்
  3. நினைவஞ்சலி ஆவணங்கள்

Appraisal, destruction and scheduling

Accruals

System of arrangement

 தொழில்சார் கோப்புகளும் நினைவஞ்சலி ஆவணங்களும் மட்டுமே மூல ஒழுங்கினைப் பின்பற்றி ஒழுங்கமைக்கப்படுள்ளன. பல்வகை கோப்புகளுள் இருந்த ஏனைய ஆவணங்கள் ஆவணக்காப்பாளரால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

அணுக்கம், பயன் பரப்பு நிபந்தனைகள்?

அணுக்க ஆளுகை நிபந்தனைகள்?

சில ஆவணங்களின் அணுக்கம் தகவல் பாதுகாப்பு கருதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

Conditions governing reproduction

Language of material

  • ஆங்கிலம்
  • சிங்களம்
  • தமிழ்

Script of material

Language and script notes

இயற்பியல் சிறப்பியல்புகளும் தொழில்நுட்பத் தேவைகளும்

1940-60 காலப்பகுதியைச் சேர்ந்த ஆரம்பகால ஆவணங்கள் நீருறு, துரு, பூச்சி அரிப்பு போன்ற சேதாரங்களுடன் காணப்படுகின்றன. சில ஆவணங்கள் நொய்மைத்தன்மையுடனும் எளிதில் அழியத்தக்கனவாகவும் காணப்படுகின்றன. பூஞ்சணம் அல்லது பூச்சிக்கழிவுடன் தெளிவின்றிக் காணப்பட்ட சில ஆவணங்கள் ஆவணக்காப்பாளரால் பேணுகை நோக்குடன் ஒளிநகல் எடுக்கப்பட்டுள்ளன. நொய்மைத்தன்மையுடனான ஆவணங்கள் தெளிவான அமிலகாரமற்ற பொதிகளில் பேணப்பட்டுள்ளன.

Finding aids

உதவு கருவி பதிவேற்றப்பட்டுள்ளது

தொடர்புடைய பொருட் பரப்பு

Existence and location of originals

Existence and location of copies

Related units of description

தொடர்புடைய விவரணங்கள்

குறிப்புகள் பரப்பு

மாற்று அடையாளம்காட்டிகள்/ இனங்காணி?

அணுக்க நுழைவாயில்கள்/ அணுகுமுனைகள்?

பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள்

இட அணுக்க நுழைவாயில்கள்

பெயர் அணுக்க நுழைவாயில்கள்

வகைமை அணுக்க நுழைவாயில்கள்?

விவரிப்பு அடையாளம்காட்டி

நிறுவன அடையாளம்காட்டி

Rules and/or conventions used

மொழிகள்

  • ஆங்கிலம்
  • தமிழ்

வரிவடிவங்கள்

  • லத்தின்
  • தமிழ்

மூலங்கள்

Accession area

தொடர்புடைய பொருட்துறைகள்

தொடர்புடைய நபர்களும் நிறுவனங்களும்

தொடர்புடைய வகைமைகள்

தொடர்புடைய இடங்கள்